பக்கம்:ஆப்பிள் பசி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒரு வாரம் வரை கொலைக் கேஸ் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இன்ஸ்பெக்டர் முனகாலா கூப்பிட்டு விடுவார் என்று சாமண்ணா தினமும் எதிர்பார்த்தான். யாரும் கூப்பிடவில்லை. வக்கீலிடமிருந்தும் எந்தச் செய்தியும் வரவில்லை.

அரிதாரம் பூசிக் கொள்ளாத நாட்கள் எல்லாம் அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. பொழுதும் போகவில்லை. தூக்கமும் வரவில்லை. மனசு அரித்துக் கொண்டே இருந்தது.

டிராமா போட்டு ஊரில் ஏழெட்டு மாதங்களாக ஏற்பட்டிருந்த களை இப்போது அடியோடு போய் விட்டது. கிழிந்த நோட்டீசுகள் ஆங்காங்கே ஊசலாடிக் கொண்டிருந்தன. பாண்டு வாத்தியம் ஊமையாகி விட்டது. ‘சூரியகுளம்’ டிராமாக் கொட்டகை ‘அம்போ’ என்று சோர்ந்து கிடந்தது.

நாடகம் நின்று போனதில் சாமண்ணாவின் துக்கத்தைக் காட்டிலும், வக்கீல் மனைவியின் வருத்தம்தான் அதிகம்.

ஊரில் பொழுது போவதற்கு வேறு என்ன இருக்கிறது? தை, சித்திரை மாதங்களில் பெரிதாகத் திருவிழா நடந்து அதுவும் உடனே அடங்கி விடும். மற்ற நாட்களில் ஒன்றுமே கிடையாது. கடந்த சில மாதங்களாய் டிராமாதான் அந்த ஊரின் உயிரோட்டமாயிருந்தது.

வக்கீல் வீட்டு வாசலில் கலாய்க்காரர் பாத்திரங்களுக்கு ஈயம் பூசிக் கொண்டிருந்தார். தெரு ஓரம் பள்ளம் தோண்டி ஈர மண்ணில் துருத்தியைப் பொருத்தி, ‘கலாய்’ பூச வேண்டிய பாத்திரங்களுக்கு நவசாரம் பூசிக் கொண்டிருந்தான் துருத்தி ஊதும் பையன். வக்கீல் மாமி நிறையப் பாத்திரங்கள் கொடுத்திருந்ததால் வாசலில் வந்து காவலாக நின்று கொண்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/65&oldid=1029578" இலிருந்து மீள்விக்கப்பட்டது