பக்கம்:ஆப்பிள் பசி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உதவியும் வேண்டாம் என்கிறயாக்கும்?”

“அப்படிச் சொல்லுவேனா? இப்போ வேறு யாராவது தனவான், கனவான் உதவி செய்வதாயிருந்தால் அதை தாராளமா ஏத்துப்பேன்...”

அவனை மீறி ஒரு நாடகச் சிரிப்புச் சிரித்தான்.

“நீ சொல்றதெல்லாம் நியாயமாத்தான் இருக்கு. ஆனா இப்ப இந்த இக்கட்டிலிருந்து நீ தப்பிக்கணுமே! அதுக்கென்ன வழி? அதுதான் எனக்குப் பெரிய கவலையாயிருக்கு. மாமாவைப் பார்த்துப் பேசிட்டுப் போ. அவர் உனக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார். அடிக்கடி வந்து அவரைப் பார்த்துப் பேசு. நானும் அவரிடம் சொல்றேன். நல்லது நடக்கும்.”

சாமண்ணா கைகூப்பி, “வரேன் மாமி! உங்க ஆசீர்வாதம் எப்பவும் இருக்கணும்!” என்றான்.

வரதாச்சாரி உள்ளே வந்தார். “சாமண்ணா சொல்றதைக் கேட்டேளா?” என்று இழுத்தாள்.

“கேட்டேன்! கேட்டேன்! எனக்கு மட்டும் பாப்பா மாதிரி அழகோடும் சொத்தோடும் ஒரு பெண் கிடைச்சிருந்தா இந்த நிமிஷத்திலேயே அவளைக் கல்யாணம் பண்ணிண்டிருப்பேன்” என்றார் வக்கீல்.

“உக்கும்! பண்ணிப்பேளே! இன்னும் நாலு கல்யாணம் கூடப் பண்ணிப்பேன். எனக்குத் தெரியுமே!” என்று தோளில் இடித்துக் கொண்டாள் கோமளம்.

71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/71&oldid=1029586" இலிருந்து மீள்விக்கப்பட்டது