பக்கம்:ஆப்பிள் பசி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“இது என்ன பெரிய விஷயம்? உனக்காக அவசியம் செய்யறேன். கவலையே படாதே! ஆனா எனக்கு இன்னொரு யோசனை தோண்றது. அது சரியாயிருக்குமான்னு பாரு. சொல்லட்டுமா?”

“சொல்லுங்கோ.”

“சிங்காரப் பொட்டு பணத்துக்காக அலையறார்னு சொல்னியே! நீ ஏன் சிங்காரப் பொட்டுக்கே ஒரு டிராமாக் கம்பெனி ஆரம்பிச்சுக் கொடுக்கக் கூடாது? அந்தக் கம்பெனியிலே சாமண்ணா சேர்ந்துக்கலாமே! அது மறைமுகமாக இவனுக்கு உதவின மாதிரி இருக்குமே! என்ன சொல்றே?"

மாமி நிறுத்த, பாப்பா பரவசத்தோடு யோசித்தாள். 

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/76&oldid=1029630" இலிருந்து மீள்விக்கப்பட்டது