பக்கம்:ஆப்பிள் பசி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-டியாப் பார்ப்பானா? ஆர்மோனியக்காரரைப் பார்க்கிற மாதிரி நாசூக்கா... நீயும்தான் கவனிச்சயே! நான் அதைப் பார்த்தேனே!” என்று உதடும் மூக்கும் பேசரியும் புன்னகையில் மூழ்கச் சொன்னாள் கோமளம்.

“எனக்குச் சந்தேகமர் இருந்தது மாமி!' என்றாள் பாதி மகிழ்ச்சியை விழுங்கிக் கொண்டு.

“போ, இதுக்கெல்லாம் சந்தேகமாக்கும். ஓர் அபிநயத்திலே மனசை முழுக்கக் காட்டறதிலே நீங்கள்ளாம் கெட்டிக் காராளாச்சே! உன்னலே இதைப் புரிஞ்சுக்க முடியலேன் நான் நம்புவேன? இரு, இதோ காப்பி கொண்டு வர்றேன்.” கோமளம் மாமி போவதையே பார்த்துக் கொண்டிருந்த பாப்பாவின் மனம் பரவசமாகிக் கையைத் திருகிக்கொண்டிருக்க, வாசல் பக்கம் யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

“மாமி இல்லையா?” என்று கேட்டுக் கொண்டே சாமண்ணா உள்ளே வந்து எதிரில் நின்றபோது பாப்பாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. மொழுக்குப் போல எண்ணெய்ப் பசையோடு மினுமினுத்தான். கண்களில் தூக்கம் தெரிந்தது. அவனைத் தொடர்ந்து நாய் ஒன்று வாலைக் குழைத்துக் கொண்டே உள்ளே வர அவன், “சூ சூ!” என்று அதை விரட்டிய வேகத்தில் அவன் விரலிலிருந்த மோதிரம் நழுவித் தரையில் உருண்டு ஓடியது, சட்டென்று அதைக் குனிந்து எடுத்த பாப்பா, “இந்தாங்க” என்று அவனிடம் கொடுத்தாள். அப்படிக் கொடுக்கும்போதே, ‘அது முந்தைய இரவு அர்ச்சுன வேடத்தில் அவன் அணிந்த பகட்டு மோதிரம், நிஜ மோதிரம் அல்ல’ என்பதைத் தெரிந்து கொண்டாள்.

“சாதாரண மோதிரந்தான்! வேஷம் கலைக்கிறப்போ கழற்றி வைக்க மறந்து போச்சு” என்றான்.

“உண்மைக்கும் பகட்டுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும்!” எனறாள்

“பாப்பா ஏன் இப்படிப்பேசுகிறாள்? இதற்குஎன்ன அர்த்தம்? இவளுக்கு என் மீது என்ன கோபம்?” என்று குழம்பினன் சாமண்ணா.

“ஏன் பாப்பா, ஏன் ஒரு மாதிரி இருக்கே? என் மேலே ஏதாவது கோபமா?”

“எனக்கென்ன கோபம்? உங்களுக்கு ஞாபக சக்தி குறைஞ்சிட்டு வர மாதிரித் தோணுது. பாவம், ஏகப்பட்ட கவலை உங்களுக்கு. மோதிரம் கழற்றி வைக்க மறந்துவிட்ட மாதிரி, எல்லாத்தையுமே மறந்துடாதீங்க!”.

“நான் வேற எதையும் மறக்கலையே!”

“மறக்காமலிருந்தால் சரி!”

“ராத்திரி நாடகம் எப்படி இருந்தது? அதைப் பற்றி நீ

90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/89&oldid=1029669" இலிருந்து மீள்விக்கப்பட்டது