பக்கம்:ஆப்பிள் பசி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-கிறார். அவர் தான் யார் என்பதைத் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ‘ஒரு அபிமானி அவ்வளவுதான்! அவருடைய இந்த அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும்படி சாமண்ணாவை அழைக்கிறேன்.”

சாமண்ணு சங்கோஜத்தோடு வந்தான். யார் அந்த அபிமானி என்று யோசித்தான்.

வரதாச்சாரி தங்கச் சங்கிலியை எடுத்து அவன் கழுத்தில் போட, சாமண்ணா சற்று அதிகமாகக் குனிய சங்கிலி கீழே விழந்து விட்டது.

‘ஒன்ஸ்மோர்’ என்று சபையில் ஒருவர் கத்த ஒரே ஆரவாரம்.

வரதாச்சாரி சங்கிலியை ‘ஒன்ஸ்மோர்’ பண்ணிக் காண் பித்தார்.

பளபள என்று அபரஞ்சித் தங்கம் சாமண்ணாவின் மார்பு பூராவும் மின்னியது. பெரிய சங்கிலி. நன்றாகக் கனத்தது. சாமண்ணாவுக்குத் தன் தாயார் ஞாபகம் வர, கண்ணிரைத் துடைத்துக் கொண்டான்.

இந்தச் சமயத்தில் முன் வரிசையிலிருந்து சகுந்தலா எழுந்து மேடையை நோக்கிச் சென்றபோது சபையில் இருந்தவர்கள் அத்தனை பேரும் அவளையே கண்கொட்டாமல் பார்த்தனர்.

மேடை ஏறிச் சென்றவள் வரதாச்சாரியிடம் ஏதோ கிசுகிசுத்து விட்டுத் தன் கையிலிருந்ததைக் கொடுக்க அவர் எழுந்து,

“சாமண்ணுவுக்கு இன்னொரு பரிசு! அந்தக் காலத்தில் மகாராஜாக்கள்தான் பொன்னுடை போர்த்துவான்னு சொல்லுவா! இப்ப மிஸ் சகுந்தலா இந்தப் பொன்னடையை சாமண்ணாவுக்கு அன்பளிப்பா வழங்கறா. நம்ப டாக்டர் மகள் ஒரு ராஜகுமாரி மாதிரிதானே?”

சகுந்தலா நிறையச் சிரித்துக் கொண்டு சாமண்ணா தன்னைப் பார்க்கிறாளா என்று கவனித்தாள்.

அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்து கைகூப்பியபடி புன்முறுவல் பூத்ததும் இருப்பிடத்தை நோக்கிச் சென்றாள்.

வக்கீல் மாமி அப்போது சட்டென்று பாப்பா உட்கார்ந்திருக்கும் அடுத்த வரிசையைப் பார்த்தாள். பாப்பா வெறித்து உட்கார்ந்திருந்தாள்.

அந்தப் பார்வை கோமளத்தின் உள்ளத்தைச் சங்கடபபடுத்தியது.

சில நிமிடங்களில் இடைவேளை முடிய, அடுத்து வந்த முதல் காட்சியிலேயே சாமண்ணா தோன்ற, கரகோஷம் சபையைப் பிளக்க, சாமண்ணாவின் தோள் மீது அலங்காரமாக இருந்த அந்தச் சால்வையையே பார்த்துக் கொண்டிருந்தாள் கோமளம்.

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/98&oldid=1029728" இலிருந்து மீள்விக்கப்பட்டது