பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 8套 வளையல்

வாயுள்ள பிள்ளை

மாந்தன் இரண்டையும் செம்மையாகச் செய்ய அறிந்தவன், இரண்டுள்ளும் பேச அறிந்ததாலேயே மற்றைய உயிரினங்களை விட மேம்பட்ட உயிரினமாக விளங்குகின்றான். மன உணர்வை. பகுத்தறிந்த ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப் பேச்சால்தான் அவன் ஆறு அறிவுடைய மாந்தன் ஆனான். பேச்சுத்தான் அவனை மாந்தனாக அடையாளங் காட்டி நிற்கின்றது. அப் பேச்சுக்கு அவன் வாய் உறுப்புக்களை முழுமையாகப் பயன் படுத்தியதால் வாயுள்ளவன் ஆனான்.

மேலும், வாயின் செயல்கள் இரண்டிலும் பேச்சே சிறந் தது. வாயின் உணர்வு உண்டு சுவையறிதல். அதனை மட்டும் பெற்றவன் நல்ல வாழ்வுடையவன் ஆகான். திருவள்ளுவப் பெருந்தகை வாய் உணர்வு மட்டும் பெற்றவரை மக்கள் இனத்த வராகக் கொண்டாரல்லர், விலங்காகவே கொண்டு மாக்கள் என்றார். வாயுணர்வின் மாக்கள் அழியிலும் வாழினும்என்? என்று, அன்னார் அழிந்தால் என்ன? வாழ்ந்தால் என்ன? என்று வெறுத்துப் பேசினார்.

ஒருவனது குடியின் பெருமையையும், அவன் பண்பையும் அவனது வாயிலிருந்து வரும் சொல்லே காட்டும் என்பது வள்ளுவர் கருத்து. நல்ல வளமான நிலத்தின் தன்மையையும் அதில் பதிந்த வித்தின் வளத்தையும் முளைக்கும் முளை காட்டும். இதனை உவமையாக்கித் திருவள்ளுவப் பெருந்தகை

'நிலத்திற் கிடந்தமை கால் காட்டும் காட்டும் குலத்திற் பிறந்தார் வாய்ச் சொல்' -என்றார்.

சொல் வாயிலிருந்துதான் வரும். ஆனாலும், சொல்லை குறிக்கும்போது வாயையும் சேர்த்து வாய்ச் சொல்” என்று இலக்கியம் வழங்கும். வாய் என்று சொல்லாமலே சொல்லை மட்டும் சொல்லலாம். வாயின் சிறந்த செயல் சொல்தான்.

1. குறள் - 429 3. § 2. - 959