பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வளையல்

தன்கையும் (செய்கையும்) வாயும் (மழலைச் சொல்லும்) அறியாமல் எனத் திணைமாலை நூற்றைம்பதிலும் சொல்லுக்காக வாய் ஆளப்பட்டது. . . - :

வெவ்வாய்ப் பெண்டிர்’’’ "வெவ்வாய் வேலன்'

தீவாய்ப் பெண்டிர்' என்றெல்லாம், அலர் துாற்றும் சொல்லையோ, பழிச்சொல்லையோ, பொய்ச் சொல்லையோ சொல்பவர் சொல் என்னும் சொல்லால் குறிக்கப்படாமல், அச்சொல்லைச் சொல்லும் வாயாலே குறிக்கப்பட்டனர். புறங் கூறலாகிய கொடுமையான சொல்லைக் கொடுவாய்' என்று நிகண்டுகள் பேசுகின்றன. இவ்வாறு சொல்லின் பழியை வாய் ஏற்றது. .. . . . . . . . . .

வாயே உண்மை

வாயின் இயல்பான தன்மை உண்மை பேசுவதாகும். இதனை வாய்மையென்னும் சொல்லில் காண்கின்றோம். வாய்மை என்பது வாயின் தன்மை' என்று பொருள்படும் சொல். இப்பொருளில் கிளைக்கும் பொருள் உண்மைப் பேச்சு’ என்பது. இவ்வமைப்பில் வாய் உண்மைச் சொல்லுக்காக நிற்கின்றது. - -

வாய்மை என்னும் சொல் வாய் +மை என வாயுடன் மை” என்னும் இறுதிநிலை சேர்ந்து நிற்கும் சொல்லாகும். இந்த 'மை' இன்றி, வாய் மட்டும் உண்மைச் சொல்லை உணர்த்தக் குறியீடாய் நிற்பதுண்டு. - c - .

“வாய்மை, சாதம், சரதம், வாய் ஆணையும் திடமும் மெய்யென அறைவர்' என்று சேந்தன் திவாகரம்,

8. திணை. துரற் - 136 9. நற். - 133 - 6 10. தொல், பொ - 8.7 11. அகம். - 203 2, 3

12. பிங், ை2020

13. சேந். திவா. ஒலிபற்றிய பெயர்த்தொகுதி - 7