பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 0 வேளையல்

'பலுக்குதல்' (உச்சரித்தல்) என்பது ஒரு சொல். 'பலுக்கு தல்' என்னும் சொல்லுக்கு மூலச்சொல் பல் என்பது. பல் இன்றேல் பலுக்குதல் இல்லை. சொல்லுக்குப் பல் இவ்வாறு குறியீடாய் நிற்கின்றது.

'உதடு இல்லாதவன் ஊமை என்பர். 'உள்ளத்தில் கள்ள மும் உதட்டில் வெல்லமும்’ என்னும் பழமொழியில் உதடு சொல்லுக்காக நிற்கின்றது.

எனவே, வாயும் சொல்லும் ஒன்றிற்கொன்று நீங்கா இயைபு கொண்டவைகளாய் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று விளங்குகின்றன. >