பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வளையல்

பூசப்பட்டு மலர் சூட்டப்பெற்ற அக்காலத்து ஏடுகளும் படிப் போர்தம் உள்ளத்தைக் கவர்வனவே.

விலைமகளிர் நாம் பெறுகின்ற பொருள் மதிப்பை மனத் திற் கொள்வாரேயன்றித் (பெறுவது கொள்பவர்) தருபவர் தகுதியைக் காண்பவரல்லர். இதனால் பொதுமக்களில் எவர்க் கும் விலைமகளிரின் உடலின்பம் - உள்ள அன்பு அன்று - எளி தாகக் கிட்டும். நூலும் படிப்பவர் ஏதேனும் ஒரு தொடர்பாக எடுப்பினும் அவர் தகுதி நோக்காமல் எடுப்பவர் தம் கைகளி லெல்லாம் போகும். இதனால், படிப்பவர் எவருக்குமே நூல் களின் மேலோட்டமான பொதுக்கருத்து - உள்ளார்ந்த கருத்து அன்று - எளிதாய் விளக்கும். - -

ஆனால், விலைமகளிரது உள்ளத்தை அறிவது அரிதாம். அவர் இருமனப் பெண்டிர். அவர்களிலே பல மனப் பெண்டி ரும் உளராம். இது போன்றே நூல்களின் உள்ளே பொதிந்துள்ள ஆழ்ந்த பொருள்களை அறிதல் அரிது.

எனவே, விலைமகள் ஒரு வகையில் எளியளாகவும், மற். றொரு வகையில் அரியவளாகவும் அமைதலால் வியத்தற்குரி யளாம். நூலும் ஒருவகையில் எளிதாகவும், மற்றொரு வகையில் அரிதாகவும் அமைதலால் வியத்தகு நிலையதே. எனவே, நூல் வியத்தகு விலைமகள் என்ற தொடர் உண்மை பொதிந்ததா கிறது; பொருத்தமான தொடருமாகும். எத்துணைதான் உண் மையும் பொருத்தமும் இருந்தாலும் விலைமகளாகக் குறிப்பதில் மதிப்பில்லைதான்’ என்று குறைபட்டுக்கொள்வார் உளரெனில் இடையில்'நான் நிற்க விரும்பவில்லை. இக்கருத்தை அறிவித்த நாலடியாரைப் பேச விடுதலே நலம்: . . . . .

பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிப்பட்டுக் கற்பவர்க்கெல்லாம் எளிய நூல் மற்றம் முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும் அறிதற் கரிய பொருள்.

.1 நாலடி - 31 7