பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாய்வுக் கொத் தின் கருத்துப்பிழிவு இந்நூலில்' என்னும் தலைப்பில் முகப்பில் தரப்பெற்றுள்ளது ஆய்வில் கடைந்தெடுக்கப் பெற்ற முடிவுகள் பட்டியலிட்டுத் தரப்பெற்றுள்ளன.

தமிழ் மொழித் தேக்கம், ஆக்கம், திரிபு" செருகல் பற்றித் தொடக்கமாகும் மொழித் துறையுடன் ஆறு துறைகளாகப்

பொருள். வரலாறு எனக் கட்டுரைகள் உள்ளன.

துறை ஒவ்வொன்றும் தனக்கென அடையாளங்கூறும் கருத் துரைகளை முகப்பாகக் கொண்டுள்ளது. கட்டுரைகளை அவ்வப் போது வெளியிட்ட இதழ் மலர்களின், குறிப்புகள் முகப்புகளின் பின்னடக்கமாக உள்ளன.

இதனைப் பதிப்பித்து வெளியிட முன்வந்த மீரா நிலையத் தசர்க்கும் வாழ்வியல் அறிமுகம் வழங்கியுள்ள நண்பர் பேராசிரியர் மு. சதாசிவம் எம். ஏ. எம். லிட்., (வாசவி கல்லூரி ஈரோடு) அவர்கட்கும் நெஞ்சார்ந்த நன்றி கூறுகின்றேன்.

'சொல்லிற் பயனுடைய சொல்லுக'

- என்னும் திருவள்ளுவப் பெருந்த கை மொழியை வெறும் வியங்கோள் வினையாகக் கொள்ளாமல், நல்லாணையாகக் கொண்ட யான் பயனுடைய கருத்துக்களையே தந்துள்ளேன்.

இக்கருத்துக்களால் தமிழ் ஆர்வலர்க்கு ஒர் உந்துதலும் தமிழ்க் கருத்துகளுக்கு ஒர் ஊட்டமும் அமைய வேண்டுமெனப் பெரிதும் விரும்புகின்றேன். -

வணங்கி அமைகின்றேன். ఉణుāఅ4ు அன்பன், 58, எழில் நகர் ر- கோவை, இளஞ்சேசன் தஞ்சாவூர்-613 007.