பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 9 3

படிக்க நூலை எடுப்போர்க்கெல்லாம் நூல்களில் மேற் போக்கான பொதுப்பொருள் எளிதிற்படும். ஆழ்ந்த சிறப்புப் பொருள் யாவர்க்கும் படுதல் அரிது. இவ்வரிய கருத்தை எளிமை யாய் விளக்க விலைமகளை உவமை காட்டினார் நாலடியார்.

கருத்து தெளிவானதும் உவமையாக நின்ற விலைமகளை விலக்கி விடலாம்.

ஒதுக்கிய குப்பையை மீண்டும் சேர்ப்பதில்லை; பூத்த குருக் கத்தியைச் சூடிக்கொல்வதுண்டு. அருவெறுக்கத்தக்க சிப்பியை அணைப்பதில்லை; முத்தை அணிய மறுப்பதில்லை. ஆயினும் மலர் வாடும்; முத்து என்றும் ஒளிரும். நாம் வாடும் மலரையும், என்றும் ஒளிரும் முத்தையும் அணிவோம். நூலின் எளிமையை யும் உணர்ந்து அரிதையும் சுவைப்போம்.

மக்களில் பல நாட்டத்தவர் உளர். அவரவர் நாட்டத்திற் கேற்பப் பேசி, அவரவர்தம் உள்ளத்தை மடைதிருப்புதல் சான் றோர் கையாண்ட முறைகளில் ஒன்று, அவ்வகையில் இவ் வுவமை காட்டப்பட்டதாகும். திருவள்ளுவப் பெருந்தகையும்,

சல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று' - என்றமையும் இப் போக்கினதே.

விலைமகள் உவமையை இத்துடன் நிறுத்தி மேலே தொடர்பு கொள்ளாமல் நூல்கள் அமைந்த நூலகத்திற்குள் புகுவோம். .

போற்றும் புலவர்

கருத்து நிறைந்த நூல்கள்: நூல்கள் நிறைந்த பேழைகள்: பேழைகள் நிறைந்த கூடம் கூடம் நிறையத் தூசிகள் - துலக மாகாது. தூசிகள் நீக்கிய கூடம் வழங்கும் பாங்கறிந்த பணி யாளர்கள்; வண்டுகளன்ன படிப்போர்: பேணும் நெறியறிந்த நூலகர். இவைகள் கூடினால் நூலகமாகும்.

2. குறள் - 402