பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளையல் துண்டு

காலில் தைத்த துண்டு

நீல நிற அலைகளுக்குப் பொன்னிற முலாம் பூசுவதற்கு மாலை நேரச் செவ்வாணக் கதிரவன் முயன்று கொண்டிருந் தான். அதில் உள்ளத்தை ஊன்றியவாறு நாகர்பட்டினக் கடற் கரைக்கண் நடை விரித்தேன்.

ஏதோ ஒன்று சுறுக் கென்று காலில் தைத்தது. அலை மேல் அடகு போயிருந்த உள்ளம் நறுக் கென்று மீண்டது. தானே கால் மேலே எழுந்தது. பெருவிரல் நகத்தில் பாய்ந்து பதிந்திருந்த ஒன்றை வெடுக் கென்று பறித்தேன். அஃது ஒரு வளையல் துண்டு.

என்னையும் அறியாமல் 'சீ, பாழும் வளையல் துண்டே! காட்சி இன்பத்தில் மிதந்த உள்ளத்தை இப்படித் திருப்பிவிட் டாயே" - என்றேன்.

நான் வெற்று வளையல் துண்டென்று கருதாதே, சங்கு வளையலின் துண்டு நான்: தாழ்வாகப் பேசாதே" - வளையல் துண்டு பேசிப் பார்த்தது.

வியந்த நான், என்ன அவ்வாறா? சங்கு என்றால் மிக மேம்பாடோ என வம்புக்கிழுத்தேன்,

'இல்லையோ? மேன் மக்களுக்கு என்னையன்றோ உவமை சொன்னார்கள். சங்கு சுட்டாலும் வெண்மை தரும்” என்ற வெண்பா உனக்குத் தெரியாதோ? அஃதிருக்கட்டும். எனது நாடு நாக நாடு: நாகரீகம் எனுஞ்சொல்லே எனது நாட்டு மக் களது அடிப்படை கொண்டு அமைந்தது என்பார்களே. புகழ்

மூதுரை : 4 !