பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 00 Q160GT山剑

'அவ்வாறு சொன்னால்தானே உங்களுக்குப் புரியும் என்று முள்ளில்லாமல் சொல்லால் குத்திவிட்டுத் தொடர்ந்தது.

‘இனிமையான இளவேனிற் பருவம். வைகாசித் திங்கள் முழு நிலவுக்கு முதல்நாள் மாலை. இதே கதிரவன்தான் அன் றும் செவ்வானத்தில் நின்றான். இந்தக் கூரைக்கண் வந்து நின்ற மரக் கலத்தின் மேல்தட்டில் நின்ற எமது அரசிளங்குமரி பீவி வளையின் பொன்னுடல் மேல் தன் பொன் கதிர்களை வீசிக் கதிரவன் அழகு பெற்றுக் கொண்டிருந்தான். என்னைக் கையில் அணிந்திருந்த உயிர்த் தோழியின் கையைப் பிடித்தவாறு ೨೮ சிளங்குமரி இறங்கிக் கரையை அடைந்தாள். நானும் அன்று தான் இங்கு வந்தேன். *

சுற்றுப்புறத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை, தொலை வில் மணல் மேடுகளில் சிறுசிறு குடில்கள் தென்பட்டன. அக் காலத்தில் கடல் இத்துணை அண்மையில் இல்லை. ஒரு கடற் கொந்தளிப்பால் ஒரு கல்லுக்குமேல் கடல் இப்போது உள்ளே வந்துள்ளது. இப்பொழுது உங்களுர் அரசு மருத்துவமனை அமைந்துள்ள பகுதி அருமையான மரங்கள் வளர்ந்த தோப் பாக இருந்தது. எங்கள் நாக நாட்டார் இங்கு வந்தால் அந்தத் தோப்பில்தான் பாடி வீடமைத்துத் தங்குவர்.'

நான் ஒரு குறிப்பு வைத்தேன்: 'எனதுதாத்தா கூறக் கேட் டுள்ளேன். அந்த இடத்திற்கு நாகர் தோப்பு’ என்ற பெயர் உண்டாம்' .

'உன் பாட்டனாருக்கு நன்றி. அவராவது ஒரு வரலாற்றுக் குறிப்பைச் சுட்டினாரே. அந்தத்தோப்பில்தான் அரசிளங்குமரி யுடன் வந்த ஏவல் சுற்றத்தார் விரைவில் மூன்று பாடி விட மைத்தனர். அவற்றில் தலையாய ஒன்றில் அரசிளங்குமரி சிறு பொழுது ஒய்வெடுத்தாள். பின்னர் நிலத்தின் உட்பகுதி நோக் கிப் புறப்பட்டாள். உடன் தோழியரும் சில ஏவலரும் சென் றோம். செல்லச் செல்ல அமைதியான, ஆனால் ஆழ்ந்து ஒதும் மந்திர ஓதை தெளிவாகிக் கொண்டே வந்தது.

'புத்தம் சரணங்கச்சாமி'