பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு - I 0.1

'தருமம் சரணங்கச்சாமி' 'சங்கம் சரணங்கச்சாமி – எனும் ஒன்றுபட்ட

ஒதை உள்ளத்தில் படிந்து நெஞ்சை நெகிழ்வித்தது. ஒரு கல் தொலைவு உள்ளே சென்றோம். அங்கு ஒரு மேட்டுப் பகுதி நிலம் திட்டுப் போன்றிருந்தது. அதனைச் சுற்றி இலத்தை , கள் செறிந்து நின்றன. அவ்விடத்திற்குப் பததி திட்டை , பெயர். 3.

நான் குறுக்கிட்டேன். இப்போது 'அவுரித் திடல்' என் கின்றோமே எந்த இடமோ? பதரிதிட்டை

ஆம் ஆம். அதுதான். பதரி திட்டை" என்பதுதான் அவுரித் திடல் என மருவி வழங்கப்படுகின்றது. அந்தப் பதரி திட்டை யின் நடுவில் அசோகப் பெருமன்னரது ஆணையால் எழுந்த Hக்கக் கோட்டம் ஒன்றிருந்தது. அக்கோட்டம் பதரி திட்டை விகாரை எனும் பெயருடையது. அக்கோட்டத்தின் ஒரு பகுதிப் பள்ளியில் புத்தமத அறிஞர்கள் உறைந்தனர். பதரித் திட்ட விகாரைக்கு மேற்குப் புறத்திலும் சில புத்தக் கோட்டங்களும், இறு தொழுகையிடமாம் சைத்தியங்களும், உலாவும் சோலைக ளாம் அராமங்களும் இருந்தன. அவ்வவ்விடங்களுக்குப் போய்ப் புத்த பெருமானை நினைந்து போற்றியும், புத்த மதத்துத் துறவுச் சான்றோரது வாழ்த்தைப் பெற்றும் எழுத இளவரசி திரும்பினாள். அக்காலத்தில் இப்பகுதி. மக்கள் வாழும் நகர்ப் பகுதியாக இல்லை. 30கல் தொலைவில் புகார் நகரம் விளங் கிற்று. ஆரவாரம் மிக்க அந்நகரினின்றும் அமைதி தாடியும் நூல்களை ஆராயவும் புத்தச் சான்றோர் இங்கு இடங்கண்டனர். குறிப்பாகக் கூறினால் தன்பாலர் என்ற புத்தத் துறவியர் இங்கு தங்கி நெத்தி என்ற நூலுக்கு விரிவுரையைப் பாலி மொழியில் எழுதினார். என்பர். அது நெத்தி பகரண கட்ட கதா எனப் பட்டது. எனவே, இப்பகுதி புத்தத் திருவிடமாகவே விளங் கியது. - >.

4 பாலி மொழியில் இலத்தை மரம் படரி எனப்படும். அம்மரங்கள் சூழ்ந்த இடம் 'படரி திட்டை எனப்பட்டு நாளடைவில் பதரி திட்டை” என்றாயிற்று.

அங்தே பிற்காலத்தில் அவுரித் திடலாயிற்று.