பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 J2 வளையல்

மேலும் இங்கமைந்த புத்த விகாரைகள் பல. எம் நாட்டார் வருகையின்போது வழிபாட்டிற் கென்று ஒரு விகாரை இருந்தது. இது நாகானை விகாரை" எனப்படும். இதனை மகாகாசபதேரர் என்றும் புத்தப்பெரியவர் எடுத்தார். நாகானனம் என்னும் பெய ரில் எம் இனம் ஒலிக்கிறதன்றோ! .

எங்கள் நாட்டார் புத்த மதத்தில் ஆழ்ந்த பற்றுடையவர். இந்த நாகை புகார் மணிபல்லவம் முதலிய புத்தத் திருவிடங் களை அடிக்கடி கண்டு போற்றி வருவர். அப்பழக்கப்படியே எமது அரசிளங்குமரியும் இங்கே வந்து உள்ளே சென்று நாகானை விகாரையில் புத்த பெருமானை பரவினாள் மாலைப் போதில் உள்ளே புகுந்த நாங்கள் இரவு தொடங்கி ஐந்து நாழிகையாகியே மீண்டோம். கடலின் விளிம்பின் ஒரத்தில் திங்கள் தங்கத் தகடாக எழுந்து எங்களது இளவரசியின் அழகைக் காணக் காத்துக் கிடந்தான். அவளைக் கரைக் கண்ணே கண்டதும் அவனது முகத்தில் தன்னழைகைக் கண்டான். அவ்வழகிற்கு ஈடுகொடுக்க ஆற்றாது தமது விளிம்பின்மேல் ஒரம் வெம்பித் தோன்றினான்.?

'ஓ' உங்கள் பீலிவளை அத்துணைப் பேரழகியோ?. என்றேன் நான்.

அவள் இயல்பிலேயே பேரழகி. தந்தத்தில் வடித்த சிலையை ஒருமுறை தங்கத்தில் தோய்த்து எடுத்தது போன்ற உடல. என்று சொன்னால் வேறு சொல்ல வழி தெரியாமல் இவ்வாறு சொல்ல நேர்கின்றது என்று பொருள். அத்துடன் இந்த நிலத் தில் அடிவைத்தது முதல் அவளது உள்ளத்தில் ஒரு தனி இன். கிளர்ச்சித் தோன்றி முகத்தில் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு பூரிப்பு அரும்பிக் கொண்டிருந்தது. இதற்கு , காரனம் உண்டு. ’ - .

அது என்ன காரணமோ? - என்றேன் நான்.

جمام-عیسمـمــینیسیاہبہ۔

சாசன வமிசம் (பாலி மொழியில்)

4.

5. பர்மா நாட்டு விவரணச் சுவடி (பாலி மொழியில் ) 5. சாசன வமிசம்

7.

மோக விச்சேதவி (பாவி)