பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து விண் டு - t 103.

துடிக்காதே’ உரிய இடத்தில் நானே சொல்வேன். மேலே கேள். இரவு நகர்ந்து கொண்டிருந்தது. காவற் பணியாளர் தவிர்த்து ஏனைய யாவரும் துயின்றனர். விடிந்தால் காவிரிப் பூம்பட்டினமாம் பூம்புகாரில் இந்திரவிழாவின் இறுதி நாள் விழா. இந்திர விழா சித்திரைத் திங்கள் முழு இரவு தாளில் துவங்கி இருபத்தெட்டு நாள்கள் நிகழும் இருபத் தெட்டாவது இறுதிநாள் வைகாசி முழு நிலவு நாளாகும். அன்று கடல் நீரில் விளையாட்டுப் போட்டி நிகழும் பன்னாட்டு வீரரும் கலந்து கொள்ளும் உலகப் போட்டியாம் அது. இந்நாட்டு அரசரும் பெருமக்களும், பன்னாட்டு அரசரும் பெருமக்களும் விளையாட்டுகளைக் கண்டும் கடலாடியும் பூரிப்பர். இக்காட்சி களைக் காணப் பன்னாட்டுப் பொதுமக்களும் இடம் பிடிக்க முந்துவர். .

இப்பெரு விழாவைக் கண்டு களிக்க வேண்டும். புகார்க்கண் அமைந்த புத்தக் கோட்டங்களைக் கண்டு தொழ வேண்டும் புத்தச் சான்றோர்களது அறிவும் வாழ்த்தும் பெற வேண்டும் இவை எமது அரசிளங்குமரி பீலிவளையினது வருகையின் தெளி வும் வெளிப்படையுமான நோக்கம் - 'அவ்வாறாயின் புலப்படாததும் குறிப்புமான நோக்கம் வேறும் உண்டோ-என்று இடைவெட்டிப் பார்த்தேன்.

‘இருக்கலாம் பொறுமையாகக் கேள்' - என்றது. மாங் தர் இயல்பு x

நான் மற்றொரு முறை வினாவை எழுப்பினேன்: கேட் கிறேன் ஓர் ஐயம். ஒரு வெளிநாட்டு அரசிளங்குமரி - அதிலும் கன்னிப்பெண்; பெற்றோர் உற்றார் துணையின்றி இவ்வாறு நாடு விட்டு வருவதுண்டோ? -

'அந்தக் காலம் மாந்தர் இயல்பும் நாகரீகமும் மணிமுடி சூடி நின்ற காலம் என்று ஒரு போடு போட்டுவிட்டு மேலே தொடர்ந்தது. அஃதொடு, பீலிவளை இவ்வாறு வந்ததற்கும் தனி அடிப்படை உண்டு; மேலே கேள். யாமம் சுழிந்தது.

'உருகெழு மூதூர் உலவுத்தலை வந்தென பெருநீர் போகும் இரியல் மாக்களொடு மடலவிழ் காவல் கடல் விளையாட்டு சிலம்பு காதை::ே111.113

8. சிலம்பு, ; ; ; 111, 113