து ன் டு . - 105
வளமனை இருந்தது. அதனைக் கண்ட பீலிவளை பூரிப்பின் விடிவெள்ளியாக ஒளிர்ந்தாள். அந்த வளமனை முகப்பில் அமைந்த சிறு பூப்பந்தர் மேடையில் ...... மேடையில் ... மேடையில் ...... பூமாண் நெடுமுடிக் கிள்ளியாம் சோழ நாட்டுப் பேரரசன் அமர்ந்திருந்தான். எம் பீலிவளைதான் முதலில் நோக்கினாள். பூரிப்பின் பிறையானாள். திரும்பி விடுவோம் என்றழைத்த தோழியைக் கையமர்த்தியதுமன்றித் தன்னைப் பின் தொடராமல் நிற்குமாறு கை காட்டிவிட்டு உணர்வின் பிழம்பாக நடந்தாள். ஒரு புன்னை மர மறைவில் தோழி நின்றாள்.
இடம்: சோலை; நேரம் மாலை; வீசுவது தென்றல்; பேசுவது குயில்; உலவுவது மலர் மனம், குலவு வன புறா, இவற்றினிடையே எழில் கொஞ்சும் அரசிளங்குமரி, ஆண்மை கொழிக்கும் சோழப் பேரரசன். என்ன கதை துவங்கும்? அக்கதை முளைத்தது. குமரியைக் கண்ட மன்னனது வியப்பை விட உணர்ச்சியின் விறுவிறுப்பு மேம்பட்டு நின்றது. யாரிவள்” என்ற எண்ணத்தை மீறிக் காதல் மயக்கம் நின்றது.
நாணமும் புன்முறுவலும் ஒன்றையொன்று முந்த நெருங்கி வந்த பீலிவளையை நோக்கினான் மன்னன். அவனது கண்களில் மன்மதன் மல்லிகை அம்பை எய்து வைத்தான். மன்னன் கனிந்த குரலில் மலரின் மென்மை எழிலை நிலவொளியில் குழைத்து உன்னைப் படைத்து விடுத்தவர் யார் பெண்ணே' என்றான். -
அவள், "ஆம், தன்கட்கெனப் படைத்தனுப்பப்பட்ட படைப்பு நான் - என்று உணர்வின் இழையில் நின்று
பேசினாள். .
அச் சொற்களை ஏற்ற மன்னனது செவிகளில் மன்மதன் அடுத்த அசோகந் தளிராம். அம்பைப் பெய்து வைத்தான். தன் கையால் அவளது கூந்தலைத் தைவந்தான். அவள் தன் உள்ளத்தால் தடுத்தாள் அல்லள். அதற்கு மேலும் அங்கு நிற்கத் தோழிக்கு நிலை கொள்ளவில்லை. அவளும் பெண் தானே. ஆனாலும், இந் நிகழ்ச்சியால் அவள் வியப்பொன்றுங்