பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 08 - 6J 6) 6f tL

ஒன்றுதான் கூறினாள். 'அரசர்பட்டினத்திற்குள் சென்றுள்ளார். அந்த நேரம் பார்த்து வந்தேன் எனது பெற்றோரைக் கானும் அவாவினேன். அவர் வந்தால் விடமாட்டார். விரைவில் கலத்தை விடுங்கள்' என்றாள். அவ்வளவு துடிப்புள்ளவரானால் அப்பெருமன்னர் நாகநாட்டிற்கே வந்தாலும் வந்துவிடுவாரே, . என்றாள் தோழி.

'போடி, போ, இந்த ஒரு திங்களிலும் நான் யார் என்பதை அரிய முயன்று அவர் தோற்றார். அறிவிக்காமலே வந்துள்ளேன்: என்று பெருமையடித்துக் கொண்டாள் பீலிவளை. பேச்சு நின்றது.

மரக்கலம் இரவில் இந்தக் கரையை அடைந்தது. தோழியும் ஒர் ஏவலனும் இரங்கி வந்தனர். இங்குள்ள பாடி வீடுகள் விரை வில் பிரிக்கப் பட்டன. பொருள்களை வாரினர் விரைந்து கலத்தில் ஏற்றினர்; ஏறினர் தோழி ஏறிய விரைவில் அவளது கையில் விளையாடிய நான் மரக்கலக் கம்பி ஒன்றில் சிக்கி உடைந்தேன் கரையோரக் கடலில் விழுந்தேன். எனக்காக அவர்கள் பயணம் நிற்குமா என்ன? நீர்க்குள்ளேயே கிடந்தேன். அலைகளின் மோத லால் இங்குத் தள்ளப்பட்டுக் கிடந்தேன்.'

நான் ஒர் ஐயத்தை உசாவினேன்: ‘'இடையில் கேட்பதற்கு வருந்தாதே. பீலிவளை பிரிந்து சென்றதை அறிந்த மன்னன் என்ன செய்தான் என்பதை அறிவாயோ?” -

"ஆம், அதனைப் பின்னர் அறிந்தேன். அரசனுடன் பீலி வளை இருந்தபோது இன்றியமையாத அரசியல் அலுவல் காரணமாக அரண்மனைக்குச் சென்று மீண்ட மன்னன் இவளது பிரிவை எண்ணி மயங்கிக் கலங்கினான். அவளே முன்னின்று தேடினான்.தானே இப்பகுதிக்கு வந்தாள். இங்கேயிருந்த ஒரு புத்தச் சாரணரைக் கண்டான். அவரிடம் அவளைப் பற்றி உசாவினாள் நிலம், நீரெல்லாம் திரிந்து புத்தரைப் போற்றி வரும் அச்சரணர் தாம் அறிந்ததைக் கூறினார்:

மன்னவ' 虚 குறிப்பன கொண்டு அவள் இன்னள் என்பதை உணர்கிறேன். இப்போது யான் அவளைக் காணேன். ஆயி