பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 1 09

னும்:அப்பெண்ணைப் பற்றியான் பல்லாண்டுகளாகவே அறி வேன். அவள் பிறந்தபோதே இவள் இரவிகுல மன்னன் ஒருவனைக் கூடிக்கருவுடன் வருவாள்' என்று கணி எடுத் துரைத்தான். அதன்படியே நிகழ்ந்துள்ளது. ஆனால், அவள் உன்னிடம் வரமாட்டாள். அவள் வயிற்று நினது மகன் வரு வான். அந்நினைவை ஒதுக்கி நினது கடமைகளைச் செய்வா யாக' - என்று கூறிப் போனார்.

பொங்கி வரும் கவலையில் அழுத்திய மன்னன் மீள வகையின்றிப்

போனான்.

நான் பத்துத் திங்கள் ஒன்றுமறியாது கிடந்தேன். பத்துத் திங்கள் கழித்து மறு சித்திரைத் திங்களில் முதல் கிழமையும் வந்தது. ஒரு நாள் நள்ளிரவு. முழு நிலவுக்கு இன்னும் நான் கைந்து நாள்கள் இருந்தன. யாரோ ஒருவன் கடலிலிருந்து கரையேறித் தள்ளாடி நடந்து வந்தான். களைத்தவனாக எனது அண்மையில் படுத்தான். - -

உயிரோடு தப்பிப் பிழைத்தாயே அந்தோ கலம் கவிழ்ந் ததோ? எந்த நாட்டவன் நீ? - என்றேன். நான்.

பெருமூச்சோடு அவன் பேசினான்: 'நான் பிழைத்தது இருக்கட்டும். அந்தப் பச்சிளங் குழந்தை என்ன ஆயிற்றோ? அதற்குப் பொறுப்பேற்று வாங்கி வந்த எம் தலைவர் கம்பளச் செட்டியார் என்ன ஆனாரோ' என்று அழுதான்.

என்ன பச்சிளங் குழந்தையா? என்ன ஏதோ புதிர் போடு கின்றாய்? சிறிது விளக்கக் கூடாதா? - என்றேன்.

புதுச் செய்தியைக் கூறத் தொடங்கினான்:

  • எமது தலைவர் கம்பளச் செட்டியார் புகார் நகரத்துப் பரதவர்: கடலோடும் வணிகர். சில திங்களுக்கு முன் வணிகம் கருதிப் பண்டைப் பொதிகள் ஏற்றிய மரக்கலத்துடன்

usao: } 3. 韦群墨 : 3 4 × 44 - 6 1