பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு I I I

அறிந்திருந்த எமது தலைவரும் மிக மகிழ்ச்சியுடன் அதற்கிசைந் தார். வணங்கிப் பேழையுடன் குழந்தையைப் பெற்றுக் கொண்

王一fsT。 . .

அந்தப் பீலிவளை மிக நெஞ்சுரம் வாய்ந்தவள் போலத் தென்படினும் குழந்தையை இறுதியாக உச்சிமோந்த போதும், குழந்தையுடன் எமது மரக்கலம் புறப்பட்ட போதும் அவளது வாய் அலறவில்லை. கண்கள் அலறின. உரை பதறவில்லை. உள்ளம் பதறியதை மார்பின் விம்முதல் காட்டியது. அப்பதறல் வியர்வை மழையாகச் சிதறியது. எங்கள் மரக்கலம் கண்பார் வைக்கு எட்டாமல் மறைந்த பின்னர் என்ன நிலை பெற்றாளோ? சோழநாட்டு அரசகுமரனுடன் மிதந்து வந்த மரக்கலம் சோழ நாட்டுக் கடற்கரையை அடைய ஒரு நாட் பயணம் இருந்தது. திடீரென்று பெருங் காற்றும் கடற் கொந் தளிப்பும் எழுந்தன. மரக் கலத்தைப் பலவகையிலும் கரை யில் சேர்த்துவிட முயன்றோம். இந்த இரவு தொடங் கியதும் முயற்சிகள் பயனற்றுப் போயின. நடுயாம இருளில் கலம் கவிழ்ந்தது. அந்த நேரத்திலும் எமது தலைவர் பேழையின் பக்கத்திலேயே. இருந்தார். நான் அவைகளால் மோதுண்டு இங்கு வந்து கரையேறினேன் ' கரைக்கு இரண்டு கல்களுக்குள்ளேயே இது நேர்ந்ததால் பலரும்பிழைத் திருக்கலாம். குழந்தை இருந்த பேழையும் மிதக்கும் அமைப்புடையது. பச்சிளங் குழந்தை என்ன ஆயிற்றோ? கம்பளச்செட்டியார் எவ்வாறு மன்னரைக் காண்டாரோ? எப்படிக் கூறுவாரோ? இப்பழிக்கு அஞ்சி என்ன ஆனாரோ? அறியேன்?-என்று அவன் கண்ணிர் விட்ட வாறே கூறிமுடித்தான்.

விடிந்தது. கடற் கொந்தளிப்பும் காற்றும் குறையவில்லை: அக் கொந்தளிப்பிலும் காற்றிலும் சோழ நாட்டு வீரர்கள் கடற்கரையெல்லாம் எதையோ தேடி அலைந்து திரிந்தார்கள்.

கம்பளச் செட்டி உயிர் பிழைத்துக் கரை சேர்ந்து விட்டார். ஆனால் குழந்தையிருந்த பேழை கடலில் வீழ்ந்தது. பின்னர்

J 5. 3 p. ; 2 5 191

I 6. 9 x : 2 g : 8, 9