பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 6 GìJ 3ỡ) 3ĩT u ! ả)

புகார் அழிந்து ஏறத்தாழப் பதினைந்து பதினாறு ஆண்டு கள் பல சிக்கலான சூழ்நிலைகளோடு கழிந்தன. நெடுமுடிக் கிள்ளியின்டா விருந்து எங்கள் நாட்டுக் குலக்கொழுந்தாம் இளமை பொலியும் திரையன் - இளந்திரையன் நல்ல திறமுடை யான் ஆனான். சோழ நாட்டு அரசியற் சூழலை நன்கு ஆய்ந்து பார்த்த மன்னன் இளந்திரையனைக் காஞ்சியில் அமைக்க எண்ணினான். அதற்கேற்பத் தொடு கழற்கிள்ளி இறந்தான். இளங்கிள்ளி ஆட்சியேறி ஆளுங்கால் இளந்திரையனாம் எம் ஏந்தலை இளவரசனாக்கினான், இளங்கிள்ளியின் ஆட்சிக்குப் பின்னர் இளந்திரையன் அரசனாகி ஆளத் தொடங்கினான். அவன் செங்கோலனாகித் திகழ்ந்தான், வீரனாக ஒளிர்ந்தான். வள்ளன்மையிற் சிறந்தான். கடியலூர் உருத்திரங் கண்ணனார் இவற்றையெல்லாம் அமைத்துப் பெரும்பாணாற்றுப் படை என் னும் நூலை இளந்திரையனைப் பாட்டுடைத் தலைவனாக்கிப் பாடிக் களித்தார்.

இவ்வாறு பேசி வந்த வளையல் துண்டு இடை நேரம் விட் டது. நீண்ட நேரம் செவி திறந்து வாயடைத்துப் போய் வியப் பிலும் புதுமை உணர்ச்சியிலும் ஆழ்ந்திருந்த நான் அவற்றி னின்றும் சிறிதளவு விடுபட்டுப் பேசினேன்:

'பெருமைக்குரிய சங்கு வளையலே! நாகர்பட்டின வரலாறு *ம9 புகுந்து அடிப்படை விளக்கந்தந்து வந்த நீ காஞ்சிபுரத் திற்கு இழுத்துச் சென்று விட்டாயே என்றேன்.

ஆம், அந்தச் செய்தியும் ஒரு துணைச் செய்தியே. ஆயினும், என் நாட்டுக் தோன்றலைக் குறிப்பிடும் ஆர்வத்தில் நான் மிக மகிழ்கின்றேன். அந்தச் செய்தியால் உன்னைப் பதினைந்து ஆண்டுகட்குப் பின்னர்க் கொண்டு சென்று விட்டேன்.

இந்த இடைக் காலத்தில் இந்தப் பதரி திட்டப் பகுதி நினைத்துப் பார்க்க இயலாத அளவில் பொலிவு பெற்று வளர்ச்சியுற்றுவிட்டது.

கடற்கரைக்கண் நாக நாட்டார் குடியிருப்புகள், தோப்புப் பகுதியில் நிறைந்தன. உட்பகுதியிலும் நாக நாட்டார் இடம் பெற்றனர். வெளிநாட்டிலிருந்து வந்தோர் இறங்கியதும் நாகர்