பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 வளையல்

பாலோர் புத்த மதக் கோட்பாட்டினராகையால் கடார நாட்டு - மன்னன் முயற்சியாலும் முதல் இராசராசன் அருளாலும் பொன் குன்று எனத் தகும் சூளாமணி விகாரம்' உருவாகியது.

இவைகளின் அமைப்பால் இந்நகர் ஒரு சிறந்த துறைமுகப் பட்டினம் என்னும் நிறைவைப் பெற்றது; பட்டினப் பாக்கம் என விளங்கியது.

பொது மக்கள், சிறு தொழில் செய்வோர், ஏவலர்கள், கலைஞர்கள் வாழும் பகுதி இப்பட்டினப் பாக்கத்தின் வடக்கே அமைப்போடு ஒர் ஊராக உருவாயிற்று. அப்பகுதியும் நாகர் குறிப்புடன் நாகர் ஊர் - நாகரூர் என்றாயிற்று. நாகரூரே காலப்போக்கில் நாகூர் என வழங்கப்பட்டது.

புகார் நகர் அமைப்பைப் போன்றே பட்டினப் பாக்கமும் மருவூர்ப் பாக்கமும் அமைந்தன. இன்னும் பட்டினம் என்ற சொல்லும் ஊர் என்ற சொல்லும் புகாரின் நிழல்களாகப் புகாரின் தடங்காட்டி நிற்கின்றன.

நாகர்பட்டினத்தின் வளர்ச்சி நாடெங்கும் பரவியது. ஏன், உலகிலும் பரவியது. தமிழகத்திலும் பிற இந்தியப் பகுதிகளிலும் வாழ்ந்தோர் வணிகம் கருதியும், அலுவல் கருதியும், வாழ்வியல் கருதியும் நாகையைச் சூழ்ந்தனர். நகரின் புறத்தே அவ்வவ் வினத்தார் சேர்ந்த சேரிகளை அமைத்துக் கொண்டனர். அங் கிருந்து பகலில் இந்த நகர்க்குவந்து தொழிலும் அலுவலும் ஆற்றி வளர்ந்தனர். இக்காலத்திலும்.

"ஆம், ஆம் நான் குறுக்கிட்டேன் - இக்காலத்திலும் நீ குறிப்பதன் அமைப்புகள் அப்படியே உள்ளன. நாகை நகரின் கிழக்குப்புறக் கடற் பகுதி அன்றி ஏனைய மூன்று திக்கிலும் நக வளைவாக நோக்கி வந்தால் வெளியிலிருந்து பல இனத்தார் குடியேறிச் சேரி அமைத்துக் கொண்டமை புலனாகிறது. சிறிது தள்ளிய தெற்கில் செட்டிமார் சேர்ந்து வாழ்ந்த சேரி (சேர்ந்து வாழும் இடம்) இன்றும் செட்டிச்சேரி எனப்படுகின்றது. அதற் கப்பால் நாகையில் தென்மேற்கில் வடுக இனத்தார் சேர்ந்து

லாழ்ந்த சிற்றுார் வடுகச்சேரி என உள்ளது. இன்றும் அப்