உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 123

முற்காலத்தில் எழுந்த இதுபோன்ற அறச்செயல்களை ஆறு முனைகளைக் கொண்டதாகக் கொள்ளலாம்.

ஒன்று, அறங்கொள்ளும் அறக்களம். இக்களம் கோவிலா கவோ பொது அறநிலையங்களாகவோ அமைந்துள்ளன.

இரண்டு, அறக்கொடையாளர். இவர் மன்னராகவோ, ஆட்சி அலுவலராகவோ, செல்வராகவோ, குழுவினராகவோ இருந் தனர்.

மூன்று, அறப்பொருள். இது நிலமாகவோ பொன்னா கவோ அணியாகவோ தட்டுமுட்டுப் பொருள் களாகவோ ,િ ஆடு உயிரினங்களாகவோ வழங்கப் பட்டவை. -

நான்கு, அற ஆவணம். இஃது ஆவண ஒலை, செப்புப் பட்டயம், கல்வெட்டு என விரிந்தது.

ஐந்து, அறத்தைச் செயற்படுத்தும் அறங்காவலர். இவர் கொடையாளரால் ஒப்படைக்கப்பட்டவரோ ஆட்சிக் குழு வினரோ ஆயினர்.

ஆறு, இவ்வைந்தின் அடிப்படையில் நிகழ்ந்த அறச்செயல். கடவுளுக்குரிய வழிபாட்டுப் படைப்புகள், ஒப்பனைப் படைப் புகள், நாளிடு தொடங்கிய பூசெய் விழா நிகழ்ச்சிகள், மக்களுக் குரிய பொதுநலன்கள் என நிகழ்ந்தவை.

இவ்வாறும் இக்காலம் நம்மிடையே எந்நிலையிலுள்ளன?

இவ்வாறனுள் அறக்கொடையாளர் முற்காலத்தவர். அவர் எவரும் இக்காலத்து இலர். கல்வெட்டில் காணப்படும் அறச் செயல்கள் பெரும்பாலும் யாவுமே அப்பொருள்களின் பயன் கொள்ளும் நடைமுறையில் இல்லை என்பது முடிவான ஒன்று. அறங்காப்பாளராக அறிவிக்கப்பட்டோரும் இக்காலத்தில் இலர். அப்பதவிகளும் மாறிவிட்டன.

TణాGమి, தற்காலத்தில் பொருத்திக் காணுதற்கு இவை மூன்றும் இயைந்து வாராதன.