பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 24 வளையல்

ஏனைய அறக்களம், அற ஆவணம், அறப்பொருள் ஆகிய மூன்றின் தற்கால நிலைகள் எண்ணற்பாலன. இவ்வெண்ணம் பெரும் வியப்பையும், ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் தரும் முடிவுரையைக் கொண்டவைதாம். எனினும் அம்முடி வுரையிலும் ஒவ்வொன்றாக இழந்து நிற்கும் படி களைக் காண முடிகிறது.

தொடக்கத்தில் குறிக்கப்பட்ட திருவல்லிக்கேணி அறச்செய லுக்குரிய அறக்களமாம் பார்த்தசாரதி கோவில் இக்காலத் திலும் இருக்கிறது. அற ஆவணமாம் கல்வெட்டு கிடக்கிறது. நெல்லும் பொன்னும் ஆகிய அறப்பொருள் போன சுவடும் இல்லை. இஃது ஒன்று போனதற்கு எடுத்துக்காட்டாகிறது.

தோலும் இல்லை

மற்றொன்றும் போன ஒன்றைக் காண முனைந்தால், நம் பெருமன்னன் இராசராசன் நினைவிற்கு வருகின்றான்.

சோழமாமன்னன் இராசராசன் வீரத்தின் விளைநிலம்; வெற்றியின் கொள்கலம்; ஆட்சியில் அணிகலம், அறச்செயலின் அடித்தளம். இப்பெருமகனது பல்வகைத் திறனையும் கண்டு வியந்தோர் பலர். அவன் காலத்திலேயே அவனுக்குச் சிலை வடிக்கப்பட்டது.

அச்சிலை செம்பால் உள்ளே கூடாக இல்லாமல் கட்டியாகச் செய்யப்பட்டது. 7: அங்குலம் நீளம் 7: அங்குலம் அகலம், 4.அங்குலம் உயரமுடைய அடிப்பீடம்; அதன்மேல் 33 அங்குலம் உயரமுடைய தாமரை வடிவம்; அதன்மேல் அடி முதல் முடி வரை 21 அங்குலம் உயரமுடைய இராசராசனது முழு உருவம் அமைந்தது.

இச்சிலையை உருவாக்க எழுந்தவன் இராசராசனது அரசு அலுவலனாக இருந்தவன்; இராசராசப் பெருவுடையார் கோயில் தஞ்சையில் நிறைவேறியதும் அக்கோயில் நிறைவேற்று அலுவ லனாக இராசராசனால் அமர்த்தப்பட்டவன். அவன் பெயர் .ெ பாய்கைநாட்டுக் கிழான் ஆதித்திசூரியன் என்பது.