பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 127

ராசனைக் காண விழைந்தனர். இராசராசன் தஞ்சைப் புறநகர்ப் பகுதியில் இருந்த இராசாசிரய மண்டபத்தில் வீற்றிருந்து இரு வரையும் வரவேற்று உரையாடினான். அவர்கள் நாகையில் புத்த விகாரை உருவாவதை அறிவித்தனர். அவர்களது உரை யாடலின் குறிப்பை அறிந்து அவர்களைத் தக்க முறையில் வழியனுப்பினான்,

பின்னர்த் தன் அலுவலருடன் கூடிக் கலந்து நாகையில் உரு வாகும் புத்த விகாரையின் தொடர்பிலும் பின்னர்த் தொடர்ந்த அதன் நடைமுறைக்காகும் வகையிலும் அறக்கட்டளை ஒன்றை அமைக்க முடிவு செய்தான். அக்காலத்துச் சத்திரியசிகாமணி வள நாட்டுப் பட்டினக்கூற்றத்துள் (பட்டினம் - நாகர்பட்டினம்) அடங்கியதாய் ஆனைமங்கலம் எனும் ஊர் இருந்தது. அவ்வூர் 9 வேலி 18 மா நன்செய் நிலத்தைக் கொண்டது. செப்பேட்டில் கண்டபடி 8943 கலம் 5 மரக்கால் 1 படி நெல் ஆண்டு வருலாயாக அளக்கப்பட்டது. அவ்வூரை நாகைப் பள்ளிக்கு வரியில்லாத நன்கொடையாக வாங்க முன் வந்தான். அவன் எண்ணம் அறக்கட்டளையாக உருவான முறை நோக்கத்தக்கது. ஓர் அறக்கட்டளை எத்துணை ஆய்வுகளுக்குப்பின் - எத்துணை கண்காணிப்புடனும் பொறுப்புடனும், பரவலானதும் துணுக்க முள்ளதுமான ஏற்பாட்டில் அமைந்தது என்பதை உணரலாம்.

மாமன்னன் ஆனைமங்கலத்தை நாகை விகாரைக்கு வரியில்லா நன்கொடையாக வழங்க ஆணையிட்டான். அந்த ஆணையை ஒலையெழுதும் அமுதன் தீர்த்தகரன், ஒலைமேலான் மும்முடிச்சோழப் பிரமராயன், மும்முடிச் சோழப் போசன் மதுராந்தக மூவேந்த வேளான் ஆகிய நால்வர் கூர்ந்து நோக்கி எழுதினர். இவர்கள் இக்காலத்து ஆவண வரைவாளர் போன் றோர். அவர்கள் அதனைப் பராக்கிரம சோழ மூவேந்த வேளான், மீனவன் மூவேந்த வேளான் ஆகிய இரு வினைப் பாட்டு ஆய்வாளர் பால் தந்தனர். அவர்கள் புறவுவரித்தினைக் களத்தார் என்னும் வரிவிதிக்கும் அலுவலாளர்பால் தந்தனர். அவர்கள் ஒப்புநோக்கி வரியேட்டுக் கணக்காகளாகிய குமரன்