துண்டு I 29
சேந்திரன் ஆட்சியிலாகும். இராசேந்திரன் உரிமையாக்கியதற்கு நன்றியாய் அவ்விகாரையின் ஒரு பகுதிக்கு 'இராசேந்திரப் பெரும்பள்ளி' எனப் பெயரிடப்பட்டது. -
இதற்குப்பின் இங்கே குறிக்க நேர்வது என்னெனில், அக் காலத்திலேயே தோலிருக்கச் சுளைவிழுங்கிகள் இருந்தார்கள் என்பதே. -
குளாமணி விகாரை கட்டப்பட்டு நிறைவேறிய அடுத்த நூற்றாண்டிலேயே இராசராசன் அமைத்த அறம் நிகழவில்லை. ஊர்க் கண்காணியாளர்கள் கோயிற் பெருச்சாளிகளாயினர் குளாமணி விகாரைக்குரிய நிலங்களைக் கவர்ந்து தமதுடைமை யாக்கிக்கொண்டனர். விகாரையின் அறச்செயல்களும் நடை முறைகளும் இடையீடுபட்டன. அப்போது ஆண்ட கடாரத் தரசனுக்கு இதனைப் புத்தத் துறவிகள் அறிவித்தனர். அவன் உடன் இராசனித்தியாதர சாமந்தன், அபிமானதுங்க சாமந்தன் ஆகிய இருவரையும் சோழநாட்டிற்கு அனுப்பினான். அந்நாளில் முதற் குலோத்துங்கன் சோழநாட்டை ஆண்டுவந்தான். கடா ரத்துத் தூதுவர் முறையிட்ட வேண்டுகோளை அவன் ஏற்று உடன் நடவடிக்கை எடுத்தான். உரிய அலுவலரை நாகைக்கு அனுப்பி நிலங்களைக் கைப்பற்றி மீட்டு மீண்டும் செப்புப் பட்ட யம் மூலமாக உறுதி செய்து விகாரைக்கு வழங்கினான்.
தற்கால நிலையில் இவ்வறம் பற்றி நினைக்கின் ஒன்றைக் குறிக்கலாம். அது ஆனைமங்கலம் என்ற ஊர் இருக்கிறது என்பதே. - .
சூளாமணி விகாரைக்கெனப் பள்ளிச்சந்தமாக விடப்பட்ட நிலங்கள் இடம்பெயர்ந்து போய்விட வில்லை; போகவும் முடி
tion oil.
ஆனால், அந்நில உரிமை எந்த நாளிலோ எக்கயவராலோ
இடம் பெயர்க்கப்பட்டு எவரெவரிடமோ உள்ளன. இவ்வாறு நிலம் கவரப்படாமல் விகாரைக்கே உரிமையாக இருப்பினும்