உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 30 வன் இாயல்

அவ்வறம் நடைமுறைப்பட வழியில்லை. ஏனெனில், பயன் கொள்ளவேண்டிய குளாமணி விகாரையே இல்லையே. விகாரை இல்லை என்பதுமட்டுமன்று, அப்பள்ளி இருந்த சுவட்டைக்கூட அறிய முடியவில்லை. நாகை மக்களிடம் சூளாமணி விகாரை' என்று சொன்னால் ஏதோ மணி விகாரமாக இருக்கும் போலும் என்று புரிந்துகொள்ளும் நிலையில் அதன் நினைவு அற்றுவிட்டது. இவ்வாறு இருந்த இடமும் தெரிய இயலாமல் பெயர்ந்து போனது வியப்பிற்குரியது அன்று.

அக்கோயிலினது பெருமையை ஆனைமங்கலம் செப்பேடு பின்வருமாறு குறிக்கிறது:

'சத்திரிய சிகாமணி வளநாட்டில், பட்டினக் கூற்றத்தில் உள்ள, உலகத்தின் திலகம் போன்ற நாகப்பட்டினத்தில் தன் உயரத்தினால் பொன்னாலாகிய மலையையும் சிறிய தாகச் செய்து தன் அழகினில் வியப்படையச் செய்கின்ற குளாமணி விகாரை'

கோயில், மலையைவிடப் பெரியதாய் பொன்னால் போர்க்கப் பட்டிருந்தது என்றால் நல்லவர் விட்டு வைப்பர். இந்த விட்டு வைக்காத பணியைச் சுரண்டிகள் தொடங்கினர். வைணவ சமயத்தினர் தொடர்ந்தனர். இடையிடையே கயவர்கள் வளர்த்தனர். ஆலந்து நாட்டவராய் வந்திறங்கியோர் பெருக்கினர். ஆங்கிலேயர் முடித்தனர்.

புத்தக்கோயில் அழிந்தது. அந்த அழிவோடு அதில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு அழிவது இயற்கை. போகட்டும். அக்கல்வெட்டின் மூலமாம் செப்புப்பட்டயத்தின் கதை என்ன?

இந்த ஆனைமங்கலம் செப்பேடு என்ற பெயருடைய செப் பேடு பெரிதும் சிறிதும் என இரு வகையினது. ஒவ்வொன்றும் 21, 21 தகடுகளைக் கொண்டது. 14 அங்குல நீளமும் 5 அங்குல அகலமும் கொண்டது. இவை இரண்டும் பறிபோயின. ஏடுகள்