இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
துண்டு
மட்டும் பறிபோகவில்லை. ஆனைமங்கலம் செப்பேடு என இராசராசப் பெருமன்னனால்-பின்னர் இராசேந்திரப் பெரு மன்னனால் பெயரிடப்பட்ட அவ்வேடு இன்று 'இலெய்டன் செப்பேடு என்று கல்வெட்டு அறிஞர்களால் குறிக்கப்படும் அளவில் அதன் பெயரும் பறிபோனது நம் பெருங்குறைபாட்டின் அறிகுறியே.
சென்ற நூற்றாண்டில் அஃது ஆலந்து நாட்டுத் தலை நகராம் இலெய்டன் நகரப் பொருட்காட்சி மன்றில் இருப்ப தாக அறிய நேர்ந்தது. வித்தையும் விற்றுத் தின்னும் கயவர்கள் வரலாற்றுக் கலையின் வித்தையா விட்டு வைப்பர் வித்தை
விற்பது அவர்கட்கொரு வித்தை போலும்,
"அந்தோ தமிழர்களே எனக் கவல்வதைவிட வேறு மொழி யில்லை. இறுதியாகக் குறிக்கப்பட்ட குளாமணிக் கோயில் அறக் கட்டளை யாவும் அற்றுப்போன வகைக்குச் சான் ரா கிறது.
அறக் களமாம் சூளாமணிக் கோயில் இல்லை. அற ஆவணமாம் கல்வெட்டு இல்லை.