பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 34 வளையல்

இம்மாற்றம் புதுமைப் போக்கில் கூறவேண்டும் என்னும் இலக்கிய உத்தியால் நேர்த்ததா: வேறு அடிப்படை கொண்டதா என்று தோட்டமிடுவதால் ஓர் உண்மை புலப்படும்.

வடநாட்டின் பகுதியாம் கோசல நாட்டின் பெருமை பேசிய கம்பர் தம் தமிழகத்தை உள்ளத்தில் நிறுத்தியே பேசினார்.

"காவிரி நாடன்ன கழனி நாடு’’’ * "என்று குறித்தார். இதுபோன்று தமிழக நினைவை வாய்ப் பேற்படும்போது வெளிப்படுத்துதல் கம்பர்தம் இயல்பு. தாம் வாழ்ந்த நூற்றாண்டுத் தமிழக மன்னதம் ஆட்சிமுறை, அவர் தம் உள்ளத்தில் ஊறி நின்றது. அதனினும் குறிப்பாகச் சோழ மன்னர்தம். ஆட்சி முறை ஊன்றி நின்றது. அதனினுஞ் சிறப் பாகப் பெருமன்னன் இராசராசனது அரசியல் நெறி ஒளிவிட்டு நின்றது. அவ்வொளிக் கதிரைப்பளிச்சிட்டுக் காட்டுவது போல் மன்னனை உடலாகக் கூறினார். இக்கருத்தையும் தம நூலில் அரசியல் படலத்தில் குறித்திருப்பது நோக்கத் தக்கது. இக்

கருத்து இயைபுடையதே என்க் காண்லாம்.

திருவள்ளுவருக்கு முற்பட்ட காலம் முதல் (தி.மு.முதல்) இடைக்கால எல்லை வரை உயிராகக் குறிக்க்ப்பட்ட மன்னவன் பின்ன்ர் ட்டில்ாக மாறுதற்கு அரசியல் நெறியில் ஏதேனும் ஒரு திருப்புமுனை நேர்ந்திருக்க வேண்டும். -

திருவள்ளுவப் பெருந்தகை மக்கள்தம் வாழ்க்கையின் ஒரு திருப்பு முனையாக முப்பால் நூலை வழங்கினார். சோழ்ப் பெருமன்னன் இராசராசன் அரசியல் நெறியின் திருப்பு முனை ஏற்படுத்தியவன். -

இராசராசன் ஆட்சி

இராசராசன் திருவள்ளுவர் ஆண்டு 10: ്.@.9.98 5இல் அரக் கட்டிலேறினான், 29 ஆண்டுகள் ஆண்டான். ஏறத்தாழ்

16 ஆண்டுகள் போர்ச் சூழலேயிருந்தது. படைவன்ன்மய்ாலும்,

ميسيس. سسسسسسسسسستضمسيحي

• கம்ப இரா. குகப்படலம் 1