பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு

போராற்றலாலும், தேர்ந்த அரசியல் அறிவாலும் தன் மைத் தனது வீரத் திறத்தாலும் 8 நாடுகள்ை வென்று அடிப்படுத்தி: னான். சோழப்பேரரசை நில்ை நாட்டினான். இடையிடையே ஆட்சி முறையிலும் கவனம் கொண்டான். நலமான அரசியல்: நெறியின் களம், வளமான பொருளியலன்றோ திருவள்ளுவப் பெருந்தகை அரசனுக்குரிய பொருள் வருவாயை, கல்: -

'உருபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்” என்று. குறித்தார்.

இராசராசன் பெரும் வருவாயாம் உறுபொருளை ஈட்டு தற்குச் செம்மையும் பரவலுமான ஏற்பாடு செய்ய முனைந்தான். அதற்கு நாட்டை அளந்து பகுத்தமைப்பது இன்றியமையாத தாயிற்று. -

நாட்டு அளவையும் பகுப்பும்

தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாட்டை 9 மாநிலங்களாகப் பிரித்தமைத் தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மண்டலமாகக்

குறிக்கப்பட்டது. அவனது இயற்பெயராலும், சிறப்புப் பெயர் களாலும் அவ்வம் மண்டலங்கள் பெயர் பெற்றன.

ஒவ்வொரு மண்டலத்தையும் புதுத்திட்டத்தின்படி, ஆட் சிக்கு எளிதாகப் பகுத்தமைக்க எண்ணி அதற்கு நாடு முழுவு தையும் அளக்கத் திட்டமிட்டான். அதற்கு உரிய அதிகாரியாகச் சேனாபதி குரவன் இராசராக மாராயனை அமைத்து நில அளவையை..நிறைவுேற்றினான். இப்பணி முடிந்ததும் அவ்வதி . காரி உலகளந்த இராசராச மாராயன் எனச் சிறப்பிக்கப்பட் டான். அளந்த கோல் 'உலகளந்த கோல்' எனப்பட்டது. இக் கோல் 16 சாண் அளவுடையது. இந்நில அளவுப்பணித்திட்டம் இராசராசனின் அரசியல் நெறித் திருப்புமுனையின் கால்கோள் - எனலாம். -

.ே குறள் : -