பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五37

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கட்சார்பாளர்கள் பொறுப்பேற்று. நடத்திய மக்கள் ஆட்சியே. . . ...--

இராசராசனின் ஆட்சிக்கு முன்னரும் ஊராட்சி இருந்த தெனினும் அதனை நிலைக்கேற்ப மாற்றியும் கூட்டியும் போக்கி யும் செம்மையாக்கி. முழு மக்களாட்சி ஆக்கிய பெருமை s இராசராசனையே சாரும். - . . . . . . . . . .

பின் குறிக்கப்படும் ஊராட்சி முறைகளைக் காணுங்கால் தற் கால ஆட்சி அமைப்புகளையும் ஒத்திட்டுக் கண்டுசெல்லின் இன் றைய மக்களாட்சி அமைப்புக்கு இராசராசனின் ஊராட்சி அமைப்பு எத்துணை அடிப்படை ஆனது என்பது விளங்கும். இராசராசன் ஆட்சி அரசியலில் ஏற்படுத்திய திருப்பு முனையின்

திறனும் புலப்படும்.

ஊராட்சி . . . . . . .

முன் குறிக்கப்பட்ட தனியூராயினும் ஊராயினும் அதன்தன் ஆளுகைப் பொறுப்பை அவ்வப்பகுதி மக்களே மேற்கொண்டனர். அப்பொறுப்பு ஊர் என்னும் பெயரில் அமைந்த ஆளுகைப் - பேரவையைச் சார்ந்தது. இப்பேரவையில் பருவமுற்ற அவ் * , ஆரார் யாவரும் உறுப்பினராவார். இவர்களினின்றும் ஆளுகைக் குழுவினர் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப் படுவர். தேர்தல் நிகழ்ச்சி பொது மன்றில் நிகழும், அரசர் ஆணை பெற்ற அரசு அலுவலர் தேர்தல் மேற்பார்வை அதிகாரியாக அம்ை altri (Election Commissioner). Gørisi GFTästá emř GGibų களாகப் (wards) பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பிலிருந்தும் ஆளுகைக் குழுவிற்கு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். . தேர்வுக் குரியோரது தகுதியும் தகுதியின்மையும் குறிக்கப்பட் டிருந்தன. ..

அவ்வவர் குடும்புப் பகுதியில் வாழ்தல், 35 அகவை. நிறைவு, கால்வேலி நிலமுடைமை, வீட்டு மனையுடைமை, கல்வியறிவுடைமை, நாணயம் நேர்மை குன்றாமை