1. 38 வளை பல்
முன் முன் ஆண்டுகள் குழுவில் அமையாமை ஆகியன தகுதி களாம். தற்காலத்து 21 அகவ்ை நிரம்புதல் ஒன்றே தகுதியாக உள்ளது. பணிக் காலம் 3 ஆண்டுகள் என்பது இன்று அரசுப் பணியாளர் 3 ஆண்டுக்கொரு முறை மாற்றல் பெறவேண்டும். என்னும் விதியை நினைவுப்படுத்துகிறது.
தீவினைக் குற்றம் புரிந்தோர், சிற்றினஞ் சார்ந்தோர். வீண் வம்பினர், கையூட்டுப் பெற்றோர். குற்றத் தண்டனையுற்றோர் முதலியோர். தற்காலத்தும் சில கடுங் குற்றங்கள். செய்தோர். தகுதியற்றவராவர். - -
தேர்தல், மன்றில் அவ்வூர்ப் பெரியவர் நம்பியாய் (Presiding officer) அமைந்தார். தேர்தல் குடவோலை முறையில் நிகழ்ந்தது. ஒவ்வொரு குடும்பிலும் தகுதிவாய்ந்தோர் பெயர் களைத் தொகுத்துக் கட்டாக்கினர், எக்குடும்பினது என்பதைக் கட்டில் குறித்தனர். இவ்வாறே பல குடும்பின் கட்டுக்களை மன்றின் மையத்தில் அமைக்கப் பட்டிருந்த ஒரு குடத்தினில் இட்டன்ர். பொழுது வேறுபாடறியாத சிறுவ்ன் ஒருவனை ஒரு குடும்புக் கட்டை எடுக்கச்செய்து அதனை அவிழ்த்து மற்றொரு குடத்தில் இட்டனர். சிறுவனைக்கொண்டு அதனின்றும் ஒர் ஒலையை எடுக்கச்செய்து அதிலுள்ள பெயரை நம்பி படிப்பர். பின் கரணத்தான் என்ற ஊர்க்கணக்கன் அறிவிப்பான். தேர்தல் அதிகாரி மேற்பார்வையிடுவார். தற்போது எண்ணிக்கை தேர்வுக்குக் கொள்ளப்படுகிறது. " . . . .” * 、 と ・ *。・・・**** き~”
இவ்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் அமைந்த குழுவே ஆளுங்குழுவாய் அமையும். இக்குழு ஆளுங்கணம் (சட்டப் பேரவை போல) எனப்பட்டது. சில்லிடங்களில் தகுதி கருதி 'மீயாளுங்கண்ம் (மேலவை போல) எனப்பட்டது. குழுவினர் . ஆளுங்கணத்தார் எனப்பட்டனர்.