பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 - வளையில் ஒப்படைக்க வேண்டும். அவனுக்கு ஆண்டு ஊதியம் ೮g తత్ర* பொன், இரண்டு புத்தாடை, நாளுதியம் நாழிநெல். -

இவ்வாளுங் கணத்தோடு பார்ப்பனர் வாழும் ப்குதியில் அவர்க்கென அவை என ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. வாணிகர், தொழிலர்க்கென் நகர் எனும் பெயரில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுக்கள் 'ஊர்' எனப்பட்ட பேரவைக் குழுவின் ஆளுங்கணத்தின் துணைக் குழுக்களாகப் பணி யாற்றின. -. . . . . . . . . . . . . . . .

இவ்வகையில் ஊராட்சி முறையில் செம்மையான மக்க ளாட்சி நெறியைப் பக்குவமாக அமைத்து அரசியலில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினான் இராச்ராசப் பெரு மன்னன். இத்திருப்பு முனை அரசியல் நெறியில் அவன் எழுப்பிய புகழ்த் தூண் எனலாம்.

மற்றொரு குறிப்பிடத்தக்க குறிப்பு உண்டு. ஆளுங்கணத் தார் கூடுதற்குத் தனி மாளிகை கட்டப்பட்டது. இயலாத ஊர் களில் கோயில் மண்டபங்களிலும் பொது மன்றங்களாம். ஆலமரத்தடி இடங்களிலும் கூடினர். அவ்வப்போது அரசன் இராசராசன் ஆளுங்கணக் கூட்டங்களில் வந்தமைந்து நிகழ்ச்சி களைப் பார்வையிட்டான். எவ்வகையிலும் தன் தலையீடு இல்லாமல் பார்வையிடுவதாலேயே ஆளுகைச் செம்மையை ஏற்படுத்தியமை 'அரசியல் திருப்பு முனையின் வெற்றிக் கொடி' எனலாம். . . . . . . . . . . . . .

ஆட்சியின் மேன்மட்டம்

ஊராட்சி அமைப்புக்குமேல் அமைந்த ஆட்சி அலுவல் அமைப்புகளை மூன்றாகக் குறிக்கலாம். அவை ஆட்சி அலுவற் செயல்க அமைப்பு, ஆட்சி அலுவல் பெருமக்கள் அமைப்பு, அமைச்சர் குழு எனப் படிப்படியாக உயர்ந்து அமைந்திருந்தன