பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் . 5

இத்தனித்தன்மைக்குக் கரணியம் என்ன?

அகத்தும் புறத்தும்:

நிலத்தோற்றத் தில் முதலில் தோன்றியது மலை. முருகன்

வாழ்வு அங்கு அமைந்தது முதற் கரணியம். மாந்தரது வாழ்வின் தொடக்கம் மலையில் தொடங்கியமை, அதற்குத் தலைக் கரணி யம். அந்த அகப்பொருள் மரபுகள் முருகனது வாழ்வியலில் தோய்ந்தமை இயைபான கரணியம். புறத்திணை வீரத்திலும் இந்த இயைபான கரணியம் உண்டு.

அவற்றில் குறிப்பாகச் சிலவற்றைப் பின்வருமாறு காண் போம்:

களவியலில் இயற்கைப் புணர்ச்சியில்:

காட்சி, ஐயம் முதலியன : வள்ளியைக் கண்டமை

முதலியன. களிறுதரு புணர்ச்சி வள்ளியை அச்சுறுத்தக்

களிற்றுத் தோற்றம். பாங்கிமதி உடம்பாட்டில்: வேட்டம்மேல் கெடுதி

வினாதல் வேடனாகிய முருகன்

மான் வரக் கண்ட துண்டோ - என்றமை,

கற்பியலில்:

களவின் வழிவாராக் கற்பு : தெய்வானை திருமணம் களவின் வழிவந்த கற்பு : வள்ளி திருமணம். பின்னர் வரைந்த பெரு : இரண்டாவது மனைவி மனைக் கிழத்தி யாக வள்ளியை மணந்தமை

புறத்தில்:

தமிழரது போர்க் கருவி

களில் வேலுக்கு முதன்மை : முருகனது படை வேல், புறப்போர் முறைகளிற் பல சூரபன்மாவுடன் போரில்.