பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 - புதையலும்

புணர்ச்சி: சொல்லாக்கம் உணர்ந்தோர்க்கும் இசைவானது இப்புணர்ச்சி.

"சு என்னும் அடைமொழி நன்மை - நல்லது - நல்லவன் - தூய்மை’ என்னும் பொருள்களைச் சுட்டுவது- க + கந்தம், சுகந்தம் என்றாகி நல்ல மணம் என்று பொருள் தருவதை அறிவோம். இதுபோன்றே நல்ல பிரமணியன்’ என்னும் பொருளில் அமைந்தது சுப்பிரமணியன்’ என்னுஞ் சொல். அப்பொருள் விரிவாகப் பிராமணனுக்கு நல்லவன்’ என்னும் பொருளையும் கூறுவர். இவ்வாறு ஒரு பொருட்படைப்பும் அதற்கொரு சொற்படைப்பும் தோன்றுவானேன்? அது வழக்கி லும் பரப்பப்படுவானேன்? அதன் உள் நோக்கம் என்ன?

தமிழர், 'முருகன் தமிழ்த் தெய்வம்' என்று போற்றிக் கொண்டிருக்கும் போதே நல்ல பிராமணன்' என்றால் அதற்கு என்ன பொருள்? முருகன் தமிழ்த் தெய்வம் என்பது தவறு; தமிழ்க்கென்று-தமிழனுக்கென்று அப்படியொரு தெய்வம் இலன் என்பதை அறிவிப்பதாகத்தானே தோன்றுகின்றது இச்சொல் வழக்கு? இல்லை என்று மறுப்பதானால் வேறொரு வினா எழும்.

தமிழ் மக்கள் தமக்குரிய இடுகுறிப்பெயராக 'முருகப்பன்'

முருகையன், முருகன்; கந்தப்பன், கந்தையன், கந்தன் குமரப்பன், குமரன்; வேலப்பன், வேலையன், வேலன்; பழனியப்பன், பழனிவேலன், பழனி, பழனியாண்டி:

என்றெல்லாம் இட்டுக்கொள்கின்றனர். இவ்வாறு வடமொழி தாய்மொழி என்று நெஞ்சத்தால் நிறைவாகக் கருதும் இனத் தார் இப்பெயர்களை இட்டுக்கொண்டுள்ளனரா? சொல்லிப் பார்த்தால் கிடைக்காதே. ஆனால், சுப்பிரமணியன், பால சுப்பிரமணியன்’ நிறையக் கிடைக்குமே. யாமும் அவர்களோடு ஒட்டிப் பார்ப்பவர்கள் என்று கருதும் இனம்புரியாத தமிழர் களும் இப்பெயரை இட்டுப் பூரிப்பதும் தெரிகின்றது. இதற்கு மேலும் ஒரு கொடுமை உண்டு. -

முருகன் முதலிய பெயர்களை இட்டுக்கொண்டிருப்போர் தாழ்ந்தவர் என்று கருதும் உளப்போக்கும் வடமொழியாளரிடம் உண்டு: