பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 8 - புதையலும்

முகிழ்த்து மலரும்: மணக்கும். பூப்படைந்த பெண்ணும் மலர்ந்து மணம் பெறுவாள். அதனை அடைமொழியுட ன் திருமணம் என்றனர். திருமணம் அமையும் வாய்ப்பான நாளை யும் நேரத்தையும் குறிக்க ஒரு சொல் கண்டனர். மலர்த் தொடர்பிலேயே அதனைக் கொண்டனர். மணம் தரும் மலருக்கு முன் பருவம் முகிழ்: அச்சொல்லைக் கொண்டு திருமணம் கொள்ளும் வாய்ப்பான நேரத்தை "முகிழ்த்தம்' என்றனர். முகிழ்த்தம்', முழுத்தம்' என மருவியது.

சிலம்பில் இதன் அடையாளந் தெரிகின்றது.

வடபுலத்தின்மேல் செல்லுதற்குரிய நல்வாய்ப்பான நாளைச் சேரன் செங்குட்டுவனுக்கு அறிவிக்கக் கணி எழுந்தான். நின்பால் தோற்ற வடபுலத்து மன்னர் உனக்குக் காணிக்கை கட்ட வரும் நல்ல நாள் இது என்று சொல்பவன்,

'திருமலர்த் தாமரை சேவடி வணங்கும் முழுத்தம் சங்கிது'

என்றான். "மறையவர் முழுத்தம் இட்டார்' - என்று உதயண குமார காவியமும் பாடிற்று. திருத்தக்க தேவரோ “மூழ்த்தத் தினுள்ளே' என்று மூழ்த்தம்' என்று பாட நச்சினார்க்கினியர் 'முகூர்த்தம்’ என்று உரையில் ஏற்றினார். இம் முழுத்தம் முகிழ்த்தம் என்பதன் மரூஉ. இம் முழுத்தத்தையும் திருகினர்; முகூர்த்தம்' என்றனர். 'ழ' கரத்தைப் படிக்க இயலாத வடவர் 'ர' கரம் ஆக்குவர். அமிழ்த்தத்தை அமிர்தம் என்றனர். இதுபோன்றே 'முகிழ்த்தம் முகூர்த்தம்' ஆக்கப்பட்டது. இன்று முகிழ்த்தம் என்றால் விளங்குமா? விளங்கினாலும் முகூர்த்தம் என்னும் வடசொல்லின் மாற்றாகவே கருதுவர். வந்ததை வரவேற்று உடையதை மறந்தனர் தமிழர். இதனைச் சிலம்பு வரலாறே சொல்லாமற் சொல்கின்றதே.

மாதவி மரகத மாலையைப் பரிசாகப் பெற்றாள். அவள் தாய் சித்திராபதி. இவள் கூனி கையில் மாலையைக் கொடுத்து

40, சிலம்பு : கால் : 30; உத: 07:4; சீ. சி. 27 53:1