பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 21

வரும் கோவலன் வணிகக் குடியினன். எனவே, கோபாலன் வேறு கோவலர் வேறு. இங்கு எடுத்துக்காட்டப்பட்டது கோவலன்' சிலம்புத் தலைவன். கோவலன் என்னுஞ் சொல்லுக் கும் ஆயரைக் குறிக்கும் கோவலர் என்னுஞ் சொல்லுக்கும் பொருட்டொடர்பு இல்லை என்பதை உணர்ந்து மேலே செல்ல வேண்டும்.

சிலப்பதிகாரத்தில் அதன் தலைவன் 'கோவலன' என்றே யாண்டும் குறிக்கப்பட்டுள்ளான். ஒரிடத்தில் மட்டும் வேறு பெயரால் அழைக்கப்படுகின்றான்.

மதுரைப் புறஞ்சேரியில் கவுந்தியுடன் கண்ணகி. கோவலன் தங்கியுள்ளனர். மாடலன் என்னும் மறையோன் அங்கு வரு கின்றான். அவன் கோவலனை நன்கு அறிந்தவன். யாவற்றையும் இழந்தவனாக வந்துள்ள அவனைக் கண்டு மிக அவவித்தான் கோவலனது பெருமைகளை எல்லாம் பேசினான். 'யானறிய

இப்பிறப்பில் நீ நல்வினைகளையே செய்துள்ளாய். முன் செய்த தீவினைபோலும் இவ்வாறு ஆனாய்' என்கின்றவன் கோவலன் பெயரைக் கூறுகின்றான். எவ்வாறு?

'விருத்த கோபால' - என்றான், கோவலனை, எச்சொல் லால் குறித்துள்ளான்? 'கோபாலன்' என்னுஞ் சொல்லால் இரண்டிற்கும் பொருள் வேறு. இரண்டன் சொற்களுமே வேறு வேறு. முன்னது கோ-அரசன் என்னும் பொருள் கொண்ட தமிழ்ச்சொல். மற்றது. 'ஆ' என்னும் பொருளைத் தரும் 'கோ, என்னும் வடசொல்லுடன், 'பாலன்” என்னும் வடசொல்லும் இணைந்த சொல்.

சிலம்பிலேயே அதன் தலைவன் பெயர் வடமொழியால் குறிக்கப்பட்டதைக் காண்கின்றோம். இவ்வேலையை யார் செய் தனர் என்பதைச் சுட்டிக் காட்டுவதுபோல் இளங்கோவடிகளார் அமைத்துள்ளார் என்று சொல்லத் தோன்றுகின்றது.

45. 3 # அடைக்கலம் : 33, 9 2 .

6, 3 * : 3 3 : 94