பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 புதையலும்

ஒன்று, குடிசையில்,உண்கலம்; மற்றொன்று, கோவிலில் அணிகலம். ஒரு கலத்தின் உண்மைப்பொருள் உணவு அளவே; மற்றொரு கலத்தின் உட்பொருள் இறையியல் கோட் பாட்டளவு,

சொல்லைப் பொறுத்த அளவில் இரண்டிற்கும் முதற்சொல் கலம் என்பதுதான். முதற்சொல்லால் மட்டும் இரண்டும் ஒன்று என்பது மட்டும் அன்று: 'கலயம்' என்னும் சொல்தான் கலசம்' ஆயிற்று. - தேயம் - தேசம், நேயம் - நேசம், இலவயம் - இலவசம் - என யகரத்திற்குச் சகரம்

போலியாகும். இவ்வாறு வாய்வழக்கில் கலயம் என்னும் சொல் கலசமாகியது. கலய'த்தின் போலிதான் கலசம்".

இதுகொண்டு, இப்படிச் சொல்லலாமா?

அடுப்பின்மேல் கலசம்; கோபுரத்தின்மேல் கலயம்.

-இவை கூறக்கூடாதவை -

சொல்லத்தகாதவை என்னும் எண்ணம் எழும். இவற்றிலும் கோபுரத்தின் மேல் கலயம்' என்று சொல்வது ஆன்மீகக் குற்றமாகவும் படும். -

மொழியளவில் நோக்கினால் கலயம் மூலம், கலசம் போவி ஒரே சொல் மூலமாக நின்று சிறுமைக் கருத்தையும், போலியா, கிப் பெருமைக் கருத்தையும் தருகின்றது. ஆனால், கலயத்

• திற்குக் கொள்ளப்படும் இச்சிறுமை அதற்கு இயல்பு அன்று. போலியான கலசத்தால் நேர்ந்தது அன்றோ? அஃதாவது போவி மூலத்தைத் தாழ்வாக்கியுள்ளது. - இது மொழி வரலாற்றில் ஒரு நிலை. இத்துடன் மற்றொன்றையும் குறிக்கவேண்டும். மேற்போக்கான நோக்கத்தில், 'கலயம்' தமிழ், கலசம்'