பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - . புதையலும்

லாம். இவ் வமைதி எண்ணத்தை மீற வேண்டிய அளவிற்குப் பல கரணியங்கள் முந்துகின்றன.

ஒருசில' என்றால் ஒன்றும் கருத வேண்டியதில்லை; ஒன்றி ரண்டென்றால் சென்று தொலையட்டும் என்று விடலாம்; இயல்பில் நிகழ்வது என்றால் முயல்வதும் வேண்டுவதன்று; இட்டுக்கட்டிச் செய்யப்படுவது என்றால் ஏறிட்டுப் பார்த்தாக வேண்டும் அன்றோ? திட்டமிட்ட செயலென்றால் திகைப்ப தோடு நின்றுவிடுவதா? -

இம்மொழி ஊடுருவல் அடியில் தொடங்கி ஆடைக்கு (வேட்டிக்கு) வந்து ஆன்மாவையே கைப்பற்றுவதானால் அது கவனத்திற்கொள்ளவேண்டியதன்றோ? கவனத்திற்கொண்ட , ஆன்மாவே சான்றாகின்றது. 'ஆ' வை மேய்ந்த பசு'

'ஆ' என்பது ஒரெழுத்தொருமொழி. இது கறவை இனத் தைக் குறிக்கும் சொல். சங்க இலக்கியங்களில் இச்சொல்லே உளது. மணிமேகலை ஆசிரியர் சாத்தனார் .இதனையே கை யாண்டார். சிலப்பதிகாரத்தில் ஆ காத்தோம்பி', 'கன்றுதேர் ஆ' என்றெல்லாம் ஆவும் உண்டு. அத்துடன் 'பசு பத்தினி", எனப் பசுவும் புகுந்தது. புகுந்த வடமொழிப் பசு இடத்தைப் பிடித்து மடத்தைப் பிடுங்கத் தொடங்கியது.

பின் வந்த புலவர் பலரும் 'ஆ' என்றும் பசு’ என்றும் இரண்டையும் ஆண்டனர். தேவார மூவர் 'ஆ வைக் கொண்ட னர். இருந்தாலும் இன்றைய நிலை என்ன பசு’ என்றால் புரி யும். 'ஆ' என்றால என்ன தெரியும்? இலக்கணம் பயில் வோர்க்கு நெட்டெழுத்துக்களில் ஒன்று என்று தெரியும். 'ஆ' என்று வாய் பிளப்பதாகப் புரியும், ஏதேனும் வலி ஏற்படும் போது குரல் கொடுப்பதாகத் தோன்றும். பயன் என்ன? 'ஆ' என்னும் சொல் அதற்கு அமைந்த பொருளில் வழக்கற்றுப் போயிற்று. 'ஆ' வைப் பசு மேய்ந்துவிட்டது. இவ்வாறு எத் துணை சொற்கள் மேயப்பட்டன? அவை யாவும் செருகலால் நேர்ந்தவை அன்றோ?