பேழையும் - 27
'ஆ' வை மேய்ந்த பசு ஆன்மாவையும் தின்னத் துவங்கி யதைக் காணவேண்டும்.
'ஆ' என்பதற்குக் கறவை இனத்தைக் குறிக்கும் பொருள், அதன் மூலப் பொருள் அன்று. அச்சொற்கு வேர்ப்பொருள் உயிர் என்பது. 'ஆ' என்னும் இச்சொல் குரலால் ஒலியெழுப் பும் உயிரினத்தைக் குறிக்கும். அதனால்தான்,இசைத் தமிழில் 'குரல்’ என்னும் இசைக்குரிய குறியீட்டெழுத்தா • 35 يلي
அமைக்கப்பட்டது.
அதன் மறுமுனைப் பொருள் வளர்ச்சிதான் ஆவி என்னுஞ் சொல். х
ஆவி உயிர். ஆவிபோகக் கத்துகிறான்’ என்று இக்காலத் தும் வழக்குண்டு. வாய் திறந்து ஊதிவிடும் உயிர்க் காற்றை ஆவி என்றனர். அகநானூறு இதனை 'ஊது ஆவி' என்று பாடியது. வாயைப் பிளந்து விடுவது கொட்டாவி எனப்படும். இதனை இலக்கியம் 'ஆவித்தல்' என்னும், நற்றிணை சிறுவெண்காக்கை ஆவித்து அன்ன" என்றது. இவ் ஆவிகள் இரண்டும் சற்று வெப்பமான உயிர்க்காற்று.
அத்தொடர்பில் வெப்பங்கொண்டவை நீராவி பாலாவி எனப்பட்டன.
'ஆ' என்பதன் மற்றொரு முனைப் பொருள் கறவை இனத் திற்கு ஆயிற்று. முதல் மாந்தர் மலைநிலத்தவர். மலைநிலத்து விலங்குகள் யாவும் அவனுக்குப் பகையானவை அல்லது பழக் கத்திற்கு அஞ்சியவை. மலையினின்றும் கீழ் இறங்கியவரது முல்லைநில வாழ்வில் அவனை அண்டிய விலங்கு கறவை இனம். அவ்வினம் 'ஆ' எனப் பெயர் பெற்றது. அதன் குரலொலியா கிய அம்மா' ஒலியும், அம்மம்' என்னும் தாய்ப்பாலைக் குறிக் கும் சொல்லும் ஆ" மாத்தரது அண்மைத் தொடர்புடையவை என்பதன் சின்னங்கள்.
3. பிங். : 1402, 5 4 15 4. அகம் : ; ; ; ; , 5. நற். ! 3 4 5 - 4