பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புதையலும்

"ஆ" . ஆன்" என்றாகும். ‘ன கரம் ஒற்றும் ஆவும் rajá என்று தொல்காப்பியம் விதி வகுத்தது. இந்நிலையிலும் உயிரி னம் என்னும் பொருளிலேயே ஆன்' என்னும் சொற்பொருள் அமைந்தது. உயிர் மட்டும் சென்று அமைதியுற்று நிலைபெறும் இடம் 'ஆனிலை உலகம்' எனப்பட்டது. இங்கு 'ஆன் உயிரைக் குறிப்பது. பிற்காலத்தார்-புறத்தின் உரையாசிரியர் உட்பட இதற்கும் பசுவைத் தொடர்பாக்கிக் கோனிலை உலகம் - கோவுலகம்' என்று கொண்டனர்.

இவ்வாறு உயிரைக் குறித்தெழுந்த சொல் கறவையினத் திற்கு ஆன்மையுடன் அனைத்து இன உயிர்களையும் குறிக்கும் - சொல்லாக ஆன்மா' என உருப்பெற்றது. ஆன் உயிர்: மா விலங்கு (அழைக்கை என்றும் பொருள்") குறுக்ே வளரும் விலங்கும் நிமிர்ந்து நின்ற மாந்தனும் ஆகிய அனைத்து உயிர் களின் உயிரையும் குறிக்கும் காரணக் குறியீட்டுச்சொல்லாக 'ஆன்மா' என்னும் சொல் அமைந்தது. இவ் வடிப்படை

கொண்டே வடமொழியின் முதல் நூல் என்று கருதப்படும் இருக்கு மறையும்.

"இரண்டுகால் உயிரும் நான்குகால் உயிரும் பசு’ என்றது.

இங்கு மற்றொரு தொடர்பையும் காணல் பொருந்தும், மேலை நாட்டார் வணிகத் தொடர்பால் சொற்கள் இடம்மாறி வழங்கப்பட்டன.

அரிசி என்னும் தமிழ்ச் சொல் மேலைநாட்டில் ஏறியதை மொழி நூலார் அறிவர். இஃது இலத்தினில் @ført (ORIZA) ஆகி ஆங்கிலத்தில் RICE ஆகியது. இது போன்றே ஆன்மா என்னுஞ்சொல் கிரேக்கத்தில் "அனிமா” ஆகியது. கிரேக்கத்தில் இதற்குப் பொருள் உயிரினத்து உள் உயிர் என்பது, இங்கே கவனத்திற்கொள்ள வேண்டியதாகும். இவ் அனிமா தான் ஆங்கிலத்தில் அனிமல் (ANAMAL) ஆகியது.

6. தொல், எழுத்து : , 32 : ! ? . புறம் J 6 : 7 .

? 8. 7 உரை

A, பிங், ! 1998 : ஐ