பேழையும் 39
இவற்றையெல்லாம் நுணுகி நோக்கின் ஆன்மா' என்னும் தமிழ்ச்சொல்லின் மூலப்பொருளாகிய உயிர்' என்பதை வடமொழி பாளர் விடுத்து 'ஆ'வைப் பசுவாக்கியமை போன்று ஆன்மா' வையும் பசு என இறையியற் கோட்பாட்டிற்குக் கொண்டனர். பசு, பதி, பாசம்’ என்னும் மூவியல் வடசொற் களில் பசு ஆன்மாவைக் கவர்ந்தது. சைவப் பெருமக்கள் சிலரே ஆன்மா’ எனக் கையாளப் பலர் பசு' என்றே எழுதினர். அதனால் ‘ஆன்மா' வடமொழியாளரால் மற்றொரு உருவத்திற்கு ஆளாகியது. அது 'ஆத்மா' என்றாக்கப்பட்டது. ஆன்மாவையும் ஆத்மாவையும் அறிவோர் ஆத்மா என்னும் வடமொழியின் தமிழ் உருவமே ஆன்மா' என்று தவறாகக் கொண்டனர்.
வடநூல் வழித் தமிழாசிரியர்.
இவ்வாறு கொண்டமை முன்னர் க் கண்ட காட்சி. காகதி" போக்கில் உண்டானதாகும்.
சுருக்கங் கருதி ஒன்றைக் காட்டினம். இதுபோன்று நூற்றுக் கணக்கான சொற்கள் வடமொழியின் மாற்றுருவமாகத் தமிழில் உள்ளனவாக வடமொழியாளரால் காட்டப்பட்டன; மாற்றப்பட்டன. இவ்வாறு செய்தவர்களை இடைக்காலத்தார் 'வடநூல் வழித் தமிழாசிரியர்" என்றனர். இவ்வாறு குறித்த யாப்பருங்கல விருத்தியின் உரையாசிரியர் ஒரு வடநூல் வழித் தமிழாசிரியரே. இப்போக்குக்குத் துணைபோன இவர், வட ம்ொழியைத் தழுவாது நிற்கும் தமிழ் உண்டா' என்று பாடும் துணிவையும் பெற்றார். இவ்வாறு தோன்றும் வடநூல் வழித் தமிழாசிரியர்களை மறுக்கும் தமிழ்மரபுத் தமிழாசிரியரும் குரல் கொடுத்தனர். தமிழில் அணியிலக்கண நூலே இல்லை’ என்றொரு குரலும் பிற்காலத்தில் ஒலித்ததுண்டு. அதற்குத் திருநாராயண ஐயங்கார் என்னும் மதுரைத் தமிழ்ச் சங்கப் பெரும்புலவர் பிற பாசைகளிலில்லாத எண்ணிறந்த பலவேறு öj 6ᏈᎠ .Ꭿ # JIᎢ ᎧaᎢ பாடல்களையும் பிரபந்தங்களையும் உடையதாய்ச்'
10. யாப், விரு . சுமுகப் பதிப்பு பக். 523
. I I. 95 1 g 491
豫? r »