இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ாதிப்புரை
ஆய்வுக் கட்டுரைகள்' என்ற இ ந் த நூல் கவிஞர் கோ. கோவை. இளஞ்சோன்அவர்களுடையஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்நூலாசிரியர் த னி த் த மி ழ் ப் பற்றி னர்: சமுதாயச் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்பவர்: பெருங்கவிஞர்: சிறந்த ஆய்வாளர் :பதிப்பாசிரியர்; பண்புமிக்கவர். த மி ழ் கூறும் நல்லுலகத் சிற்கு நன்கு அறிமுகமானவர். பாவேந்தரோடு பழகும் நல்வாய்ப்பைப் பெற்றவர்.
மீரா நிலையம் இதுவரை பன்மொழிப் புலவர் மு.ச. சிவம் அவர்களுடைய நூல்களையே வெளியிட்டு வந்தது. புகழ்பெற்ற பிற அறிஞர்களின் படைப்புகளையும் வெளியிட அவாவுகிறது அவ்வகையில் கோவை. இளஞ்சேரனாரின் ஆய்வுத்தொகுதியை இப்போது வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறது.
t
இந்நூலைக் குறுகிய காலத்தில் அழகுற அச்சிட்டுத் தந், அண்ணாமலைநகர் சி வ காமி அச்சகத்திற்கு எங்கள் நன்றி உரியது
ஈரோடு மீரா நிலையத்தார்
25-12-91