பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 33

சார் வடமொழியாளர், 'சீ' என்பதை மூலமாகக் காட்டுவர். சீ' என்பதற்குப் படுதல் அழித்தல்', பொருள். ஒருமுனையார் மங்கலப்பொருள் சொல்ல, மற்றொரு முனையார் அழிவுப் பொருள் காட்ட இருமுனைப்பட்டது. வடமொழிச் சிவம்'.

(இலிங்கம், சிவம் என்னும் அருவ உருவம் பற்றி இவ்விடத் தில் கருதவில்லை. அஃதொரு தனி ஆய்விற்குரியது; இதுபோது சிவம் என்னும் சொல் பற்றிய கருத்தே பேசப்படுகிறது.)

'சிவம்' என்னுஞ்சொல் 'சைவம் என்று ஆவதற்குத் தொல் காப்பியத்தில் விதியில்லை என்கின்றனர். -

'உயிரும் புள்ளியும் இறுதி யாகிக்

குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி

நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியும்

அன்னவை எல்லாம் மருவில் பாத்திய'

என்னும் தொல்காப்பிய நூற்பா பண்புச்சொல், மருஉ மொழி யாகும் என்கின்றது.

இவ்விதிப்படி 'செம்மை என்னும் பண்புப் பொருள் தரும் 'சிவம்,-சைவம் என மருவி வழங்கப்பட்டது. இவ்வாறு மருவிய மொழிகள் பல நம் வழக்கில் உள்ளன. ஒன்று கொள்ளலாம். தோற்ற கால மாந்தன் மொழிகொள்ளாது கையாற் காட்டும் செயலால் கருத்தை வெளிப்படுத்தினான். இது செய்கை’ எனப்பட்டது. இச்சொல் காலப்போக்கில் சைகை என மருவியது. இச்சொல் 'செ.சை ஆக மருவுதற்கு எடுத்துக் காட்டு.

மொழி முதலில் மட்டுமன்றி மொழியிறுதியிலும் இவ்வாறு மருவும்.

நன்செய், நஞ்சை என மருவியதில் இதனைக் காண்கின்

றோம். இகரம் ஐகாரமாக மாறும். பித்தம்' என்னும் சொல்

பைத்தியம்’ என வழக்கிலும் உள்ளதைக் காண்கின்றோம்.

7. தொல், த்து : , தால எழுத்து as: