பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - புதையலும்

இவ்வாறே சிவம்' என்னும் தூயதமிழ்ச்சொல் சைவம்' என மருவிற்று. இவ்வாறு மருவி வருதலை 'வழங்கியல் மருங்கின் உணர்ந்து ஒழுக வேண்டும். அவ்வாறு 'ஒழுகுதல் நல்லறிவில் நாட்ட முடையோர்க்கு இயல்பு. இவ்வாறு நாம் கூறவில்லை. தொல்காப்பியர் இடித்துக் கூறும் மொழிகள் இவை:

'கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத் தென்மனார் புலவர்' நல்லறிவில் நாட்டமுடையார் தேர்ந்து தெளிவார்களாக

ஒரு மொழியில் மற்ற மொழிச் சொற்கள் புகுவதும் பர வு வதும் இயற்கைதாம். தமிழிலும் வடசொற்கள் புகுந்தன. வட மொழியிலும் தமிழ்ச்சொற்கள் இடம் பெற்றுள. இரண்டும் இன்றியமையாதன என்று கொள்ள வேண்டியதல்ல. ஒன்றை யொன்று விலக்கி வாழ இயலும். தமிழ் அவ்வாறு வாழும் இயல் புடைய மொழி எனத் தமிழறிஞர்களாலும் வெளி நாட்டு மொழியறிஞர்களாலும் நாட்டப்பட்டுள்ளது.

இதனை அறிந்தும் தமிழைத் தம் தாய்மொழியாக உள்ளு னர்வோடு ஏற்றுக் கொள்ள மனங்கொள்ளாத சிலர் இது போன்ற குறுக்குநடை போடுவதைப் பார்க்கும்போது தமிழைத்' தாய்மொழியாக உள்ளுணர்வோடு கொண்டோர் ஒன்றைக் கடுமையாகக் கொள்ள வேண்டும்.

எழுத்து, பேச்சு, சொற்பொழிவு முதலிய முனைகள்தோறும் தமிழாக்கம் விழைவோர் தமிழ் மறுப்பாளர் வலிந்து கூறுப வற்றை மறுத்துக்காட்டும் பணியைக் கடமையாகக் கொள்ள வேண்டும். இலக்கிய நிகழ்ச்சியாயினும், குமுகாய நிகழ்ச்சியா யினும், அரசியல் நிகழ்ச்சியாயினும் இக்குறிக்கோளை ஒரு கோட்பாடாகக் கொண்டு பணியாற்ற வேண்டிய காலம் தோன்றியுள்ளது. இவற்றிலும் குறிப்பாகத் திருக்கோவில்

5 5. 3 *

I 8.