பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கட்டுரை.

தமிழில் சொற்பொழிவு

     சொற்பொழிவு, சொற்பெருக்கு ஆகிய தொடர்கள்

பிற்காலத்தில் உருவானவை. இதுகொண்டு முற்காலத் தமிழகத்தில் சொற்பொழிவே நிகழவில்லை என்றோ, சொற்பொழிவு என்றொரு துறை இல்லை என்றோ கூறக்கூடாது.

'தமிழ்நாட்டில் பழைய காலத்தில் சொற்பொழி வாற்றுவது உண்டா? பேச்சு வன்மை உண்டா? என்று பலர் கேட்கிறார்கள். ஏதோ பேச்செல்லாம் கப்பலேறி ஆங்கிலத்தோடு ஆங்கிலமாக வந்ததாக எண்ணம்'

என்று மறைந்த டி. கே. சி. அவர்கள், 'எல்லாம் வெளி நாட்டுச் சரக்கு' என்பாரைக் குறிப்பாக மறுத்து எழுதினார். சொற்பொழிவுத்துறை நம் நாட்டில் இறக்குமதி ஆனது என்பதற்கு மாறாகப் பழந்தமிழகத்தில் இத்துறை இருந்தது. இது நெறியும் முறையும் கொண்டதாக விளங்கியது.செம்மையும் செழிப்பும் கொண்டதாகத் துலங்கியது.

திருக்குறளில் உள்ள சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை என்னும் அதிகாரப் பெயர்களே பழந்தமிழகத்துச் சொற்பொழிவுத் துறைக்குப் பதிவான முத்திரைகள், நாலடியார், பழமொழி முதலிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அமைந்த இவ்வதிகாரங்களும் அவை வழங்கும் கருத்துக்களும் தக்க அடையாளச் சின்னங்கள்.

தொல்காப்பியத்தில்,

1. இலக்கியச்சுவை-கட்டுரை