பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வளையல்

அறிவுரையாக வழங்கப்படும் சொற்பொழிவு செவிய றிவுறுாஉ' எனப்பட்டது. வாழ்த்துரையாக வழங்கப்படுவது “வாயுறை வாழ்த்து' எனப்பட்டது சமயத் தொடர்பான, உரை 'புண்ணிய நல்லுரை' எனப்பட்டது.

கட்டுரை

சொற்பொழிவைக் குறிக்கும் மற்றொரு பொதுச்சொல் லாகக் கட்டுரை' என்னும் சொல் இடம்பெற்றது.

இக்காலத்தில் "கட்டுரை உரைக்கப்படுவதைக் குறிப்பதாக இல்லை; எழுதப்படுவதைக் குறிக்கின்றது. ஒரு கருத்தை விளக்கிக் கட்டுக்கோப்புடன் எழுதப்படுவதைக் கட்டுரை' என்கின்றோம். இக்கருத்துக்கு மூலகாரணமாகத் தொல் காப்பியமும் சிலப்பதி காரமும் கருத்துக்களைத் தருகின்றன.

'கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்து’’ (தொல். பொருள். 428) என்னும் தொல்காப்பிய அடியில் குறிக்கப்படும் கட்டுரை என்பது செய்யுள் அன்றி உரையாகத் தொடுக்கப் படுவது. அஃது எழுத்தாகவும் பேச்சாகவும் அமையலாம்.

சிலப்பதிகாரத்தில் உள்ள உரைபெறு கட்டுரை' என்னும் தொடர் கட்டுரை' என்பது எழுதப்படுவதைக் குறிக்கும் என்ப தற்கு ஒரு அமைப்பாக உள்ளது. ஆனால் இத்தொடருக்குக் கொண்ட மாற்றுக் கருத்தால்தான் 'கட்டுரை எழுதப்படு வதைக் குறிப்பதாயிற்று. "உரைபெறு கட்டுரை” என்பது பாடல் அன்றி உரை நடைபெற்றுப் பொருள் பொதிந்ததாய் உரைக்கப்படுவது என்னும் பொருள் கொண்டது. சிலப்பதி காரத்தில் உள்ள அப்பகுதி எழுத்துரைபெற்றுள்ளது என்னும் ஒரேவகை எண்ணத்தால் எழுந்த கருத்தின் வளர்ச்சியே காலப் போக்கில் எழுதப்படுவதைக் குறிக்கும் சொல்லாய்க் கட்டுரை' பயன்படலாயிற்று.

5. தொல் - பொருள்-48 6. ●料 to jo

垒亚7 7. மணி-விழாவறை காதை-59