பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வளையல்

'வாமன் வாய்மை ஏமக் கட்டுரை'

என்று குறிக்கின்றது. பழிச்சொல்லைப் பலரிடம் பேசிப் பரப்பு என்னும் பொருளில்

'பான்மைக் கட்டுரை பலர்க்குரை'

எனப்படுகிறது. கந்திற் பாவை சொற்பொழிவைப் போன்று தொடர்ந்து கூறிய செய்திகளைத் -

"தெய்வக் கட்டுரை என்றும்

கந்திற் பாவை கட்டுரை யெல்லாம்'

என்றும் கட்டுரை என்றும் சொல்லால் மணிமேகலை குறிக் கின்றது. --

தம் மதத்தை நிலைநாட்டச் சொற்போரிடும் பட்டி மன்ற سردر நிகழ்ச்சி முற் காலத்திலிருந்தது. அவ்வாறு வினாவும் விடையு மாய் மாறி மாறிக் கருத்துப்போரிட்டுச் சொற்பொழிவாற்று வதும் கட்டுரை என்னும் சொல் கொண்டு மணிமேகலையில் பேசப்பட்டுள்ளது: * ,

器 <

... ... ... ... ... ... முட்டைமுந் திற்றோ; பனைமுந் திற்றோ எனக் கட்டுரை செய்'

எனும் அடிகளில் அக்கட்டுரையைக் காண்கின்றோம்.

இயற்கைக் காட்சியையோ, ஒருவர்தம் அழகையோ பாராட்டி வர்ணிக்கும் பேச்சும் கட்டுரை எனப்பட்டது. கலித் தொகையில் ஒரு காதலன் முதலில் தன்னைக் கண்ட காலத்தில் தன அழகைப் பலபடப் பாராட்டி என் உள்ளத்தை கவர்ந்தான் என்று குறிக்கும் காதலி, ----

"பலபல கட்டுரை பண்டையில் பாராட்டி'

(பாலைக்கலி 14) எனப்பாராட்டிப் பேசுதலைக் கட்டுரை என்ற சொல்லால் குறித்

1 1, սց, - 12 13. ” — 259

13. மணி ஊரலருரைத்த காதை -25, 26