பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 43

தாள். இவ்வாறு அழகைப் பாராட்டிப் பேசும் பேச்சைக் கட்டுரை யாகச் சிலப்பதிகாரமும் பேசுகின்றது.

பள்ளியறையில கண்ணகியுடன் கோவலன் குலவி மெய்

மறந்து அவளது அழகைப் பாராட்டி பேசினான். கண்ணகி பேச வில்லை. கண்ணகியை முன்னவைத்துப் பேசினான். தொடர்ந்து அவனே பேசினான். கண்ணகி பேசவில்லை. ஒரு சொல்லும் சொல்லவில்லை. எனவே, இஃது உரையாடல் அன்று. கண்ணகி யை விளித்து, அவள் உறுப்புகளைப் பலபட வர்ணித்துப் பேசி னான். இப்பேச்சு 43 அடிகளில் நீண்டுள்ளது. இப்பேச்சில் உவமை வருகின்றது. கதைக் குறிப்பு உள்ளது. கருத்து விளக்கம் உன்ளது. ஓரளவில் சிறு சொற் பொழிவு எனலாம். இப்பேச்சின் தொடக்கத்தில்,

"கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை’’ என்றும் முடிவில்

'உலவாக் கட்டுரை பலபாராட்டி’

என்னும் இப்பேச்சும் சிறு சொற்பொழிவு, கட்டுரை' என்றே குறிக்கப்படுகின்றது. 'குறியாக் கட்டுரை' என்பதாலும் உல வாக் கட்டுரை' என்பதாலும் ஒரு குறியில்லாமல், அஃதாவது திட்டமிடப்படாமல் தொடங்கி முடிக்க இயலாமல் அமைத்த உரையாற்றலாகிய கட்டுரை இது. அஃதாவது முன்னுரையும் முடிவுரையும் இல்லாத பேச்சு.

மாங்காட்டுப் பார்ப்பான் மதுரைக்குச் செல்லும் வழியை விளக்கி நீண்ட உரையாற்றினான். அதனைக் கேட்ட கவுந்தி அடிகள் அவன் கருத்தை மறுத்து ஒரு சிறு உரையாற்றினார். அது. . . . .

'கவுந்தி ஐயையோர் கட்டுரை சொல்லும்'

என்று கட்டுரையாகக் குறிக் கப்பட்டுள்ளது.

1 4. к ?

- பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை - 13 I 5. 鲨? -

- சிறைவிடு காதை - 47 .”

1 5. * * --- 岁衅 в з 8 عصصبه I g

£ 3 - கச்சிமாநகர்புக்க காதை - 185

魔7.