பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 . வளையல்

இல்வாறு ஒருவர் கூற்றை மறத்து நன்மை தீமையை ஆராய்ந்து அதற்கேற்ப மாற்றம் கூறுவதைக் கட்டுரை என்று பழ மொழியும்.

"நல்லவும் தீயவும் நாடிப் பிறருரைக்கும் நல்ல பிறவும் உணர்வாரைக் கட்டுரையின் வல்லிதின் நாடி வைப்பதே புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு மாறு’’ .

எனக் குறிக்கின்றது. .

சிலப்பதிகாரத்தில் 23வது காதை “கட்டுரை காதை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக்காதையில் மதுராபதி என்னும் தெய்வம் கண்ணகியிடம் பேசும் நீண்ட பேச்சு உள்ளது. இக்காதை 200 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 156 அடிகள் மதுராபதியின் தொடர்ந்த பேச்சாக உள்ளது. அப்பேச்சில் சொற் பொழிவின் அமைப்புகளைக் காண்கின்றோம்.

தொடக்கத்தில் அத்தெய்வம் கண்ணகியை அடுக்கு மொழி களால் விளிக்கின்றது. சொல்ல இருக்கும் கருத்தை முன்னுரை யாகச் சுருக்கிச் சொல்கிறது. பாண்டியரது குடிப்பெருமையைசெங்கோல் தவறாமையை விளக்குகின்றது குட்டிக் கதைக் குறிப்புகள் வருகின்றன. உவமை வருகின்றது. ஒரு சான்றுக் காகப் பராசரன் என்னும் பார்ப்பனன் கதையை நீட்டிச் சொல் கின்றது. கருத்து விளக்கம் தருகின்றது. கண்ணகியின் முற் பிறப்புக் கதையைக் கூறுகிறது. தக்க முடிவுரையுடன் பேச்சை முடிக்கின்றது. -

ஒரு சொற்பொழிவு என்பது முன்னுள்ளாரை விளித்தல் -அறிமுகம் செய்து கொள்ளல் எடுத்த கருத்துக்கு முன்னுரை சொல்லல்-சான்று உவமை, குட்டிக் கதைகள், பழமொழிகள், வண்ணிப்பு. அடுக்கி மொழிதல், கருத்தை விளக்கல்-எடுத்த குறிக் கோளை நிறைவேற்றி முடித்தல் என்ற அமைப்பில் இக்காலத்தில் விளங்குவதைக் கொண்டு நோக்கினால் மதுராபதியின் இக்

18. 《3 - பவத்திறமறுகெணப் பாவைநோற்ற காதை- 245,246. 19. கலி - பாலை -14-7 20. சிலம்பு - மனையறம்படுத்த காதை - 37 21. ** – ’’ ” 81